Asianet News TamilAsianet News Tamil

இப்பவும் அவருதாங்க டாப்பு.. அவரலாம் ஓரங்கட்டாம ஒழுங்கா டீம்ல எடுங்க.. கும்ப்ளே அதிரடி

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் சீனியர் வீரர் ஒருவருக்கு முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

anil kumble feels still ashwin is the best spinner of indian team
Author
India, First Published Sep 9, 2019, 4:49 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினை, அந்த அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் புறக்கணித்தது, முன்னாள் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சிகரமானதாக அமைந்தது. 

முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், அஷ்வினின் புறக்கணிப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் அஷ்வினுக்கு ஆடும் லெவனில் இடமில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

இரண்டாவது போட்டியிலாவது சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியிலும் புறக்கணிக்கப்பட்டார் அஷ்வின். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அந்த அணிக்கு எதிராக அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 4 சதங்களை விளாசியுள்ளார் என்பதும் கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அஷ்வின் தான் தொடர் நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

anil kumble feels still ashwin is the best spinner of indian team

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருந்தும் கூட, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். அஷ்வினின் புறக்கணிப்பு சர்ச்சையான நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா எடுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கினார். 

அதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, இந்தியாவிற்கு வெளியே மிகவும் துல்லியமான மற்றும் நிலையான பவுலர் ஜடேஜா. அதனால் தான் ஜடேஜாவை ஆடும் லெவனில் எடுத்தோம். ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லாத சூழலிலும் அவர் கட்டுக்கோப்பாக வீசுவார். பந்து நன்றாக திரும்பாத ஆடுகளத்திலும் கூட, சரியான ஏரியாக்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் ஜடேஜா என்று ஜடேஜா தான் இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் என்று நியாயப்படுத்தக்கூடிய வகையில் பேசினார். 

anil kumble feels still ashwin is the best spinner of indian team

இந்நிலையில், இப்போதும் அஷ்வின் தான் இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் என்று முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கருத்து தெரித்துள்ளார். இதுகுறித்து பேசிய கும்ப்ளே, இன்னும் அஷ்வின் தான் இந்திய அணியின் பெஸ்ட் ஸ்பின்னர். அஷ்வின் காயத்தால் அவதிப்பட்டும், சில போட்டிகளில் சரியாக சோபிக்காமலும் இருந்திருக்கிறார். ஆனால் அவர்தான் இந்திய அணியின் நம்பர் 1 ஸ்பின்னர். அவர் கண்டிப்பாக டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் இருக்க வேண்டும் என்று கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios