Asianet News TamilAsianet News Tamil

இப்படிலாம் ஆடுனா தோத்துதான் போகணும்.. சொந்த அணியையே தாறுமாறா கிழித்த ஆண்ட்ரே ரசல்

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 
 

andre russell slams kkr teams decision making
Author
India, First Published Apr 28, 2019, 11:07 AM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் அளவில் உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி தான். முதல் 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்ற கேகேஆர், அடுத்த 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கிவிட்டது. அந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஆண்ட்ரே ரசல். 

டெத் ஓவர்களில் எதிரணிகளின் பந்துவீச்சை தெறிக்கவிட்டு, சாத்தியமில்லாத விஷயங்களை கூட சாத்தியப்படுத்திவிடுகிறார். மிரட்டலான ஃபினிஷிங்கின் மூலம் எதிரணிகளை தெறிக்கவிடுகிறார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பவுலர்கள் திணறிவருகிறார்கள். கேகேஆர் அணியில் இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரராக ரசல்தான் உள்ளார். ரசல் ஒருவர் தான் கேகேஆர் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். கேகேஆர் அணி அவரை அதிகமாக சார்ந்திருக்கிறது. 

andre russell slams kkr teams decision making

பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி இடத்தை பிடிப்பதற்கு சன்ரைசர்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் கேகேஆர் அணியும் இருந்தது. ஆனால் தொடர் தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

11 போட்டிகளில் ஆடி வெறும் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளது கேகேஆர் அணி. எனவே இனிமேல் பிளே ஆஃபிற்கு தகுதிபெற வாய்ப்பில்லை. சீசனின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய கேகேஆர் அணி, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவி பின் தங்கியுள்ளது. 

தொடர் தோல்விகளுக்கு முக்கியமான நேரங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் தான் காரணம் என்று கேகேஆர் வீரர் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கேகேஆர் அணி மோத உள்ள நிலையில், தொடர் தோல்விகள் குறித்து பேசிய ஆண்ட்ரே ரசல், நாங்கள் நல்ல அணிதான். ஆனால் தவறான முடிவுகள் எப்போதுமே தோல்விக்கு வழிவகுக்கும். அதைத்தான் நாங்கள் செய்தோம். பவுலர்கள் சரியான ஏரியாக்களில் பந்துபோடாததும் சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்தாதும் சில தோல்விகளுக்கு காரணம். அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால் சில போட்டிகளில் ஜெயித்திருக்கலாம்.

andre russell slams kkr teams decision making

பவுலர்களை சரியாக பயன்படுத்தாததால் தொடர் தோல்விகளை சந்தித்து இன்று மோசமான நிலையில் இருக்கிறோம். மிகவும் எளிதாக சில போட்டிகளில் தோற்றுவிட்டோம். அவ்வளவு வலுவான பேட்டிங் ஆர்டர் இல்லாத ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது என்னை அதிருப்தியடைய செய்தது. வலுவான பேட்டிங் ஆர்டர் இல்லாத அணியை 170 ரன்களுக்குள் சுருட்ட முடியவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணி போன்ற வலுவான அணிக்கு எதிராக ஏதாவது அதிசயம் நடந்தால் தான் உண்டு என்று ரசல் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios