ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் பாதியை தனது அம்மாவின் பெயரில் எழுதி வைத்திருப்பதாக கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் செய்த நிலையில் அந்த ஆண்டில் மே 31 ஆம் தேதி கொரோனா லாக்டவுன் காரணமாக மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. 2 மாதங்களுக்கு பிறகு இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

பேட் கம்மின்ஸ் நிற்கும் தோரணையை வைத்து டிராபி யாருக்கு என்று காட்டிய போட்டோஸ்!

கடந்த 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதோடு, நடாஷாவை பிரிய நேரிட்டால், 70 சதவிகித சொத்தை ஹர்திக் பாண்டியா ஜீவனாம்சமாக கொடுக்க நேரிடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான், ஹர்திக் பாண்டியாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை – அமெரிக்கா புறப்பட்ட ரோகித் சர்மா அண்ட் கோ – ஹர்திக், கோலி செல்லவில்லை – காரணம் தெரியுமா?

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த பாண்டியா, தமது சொத்தில் பாதியை தனது அம்மாவின் பெயருக்கு எழுதி வைத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தான் வாங்கும் கார் மற்றும் வீடு எல்லாமே தனது அம்மாவின் பெயரில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக தன்னிடமிருந்து ஹர்திக் பாண்டியா ஜீவனாம்சமாக எதுவும் பெற முடியாது என்பதை விளக்கும் வகையில் தான் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

View post on Instagram