டுப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பி, லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. உலக கோப்பை தோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் உட்பட பயிற்சியாளர் குழுவில் உள்ள அனைவரும் நீக்கப்பட்டனர். 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவை சேர்ந்த அமோல் முஜூம்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மும்பையை சேர்ந்த முஜும்தர், 1994ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 171 முதல்தர போட்டிகளிலும் 113 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார் முஜும்தர். முஜும்தர் சரியாக தேர்வாக என நம்பி தென்னாப்பிரிக்க அணியின் இடைக்கால பேட்டிங் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகக்கூட இருந்துள்ளார்.