ஹர்மன்ப்ரீத் கௌர் ரன் அவுட் விவகாரத்தில், அவர் வேகமாக ரன் ஓடாமல் அசால்ட்டாக ஓடியதுதான் காரணம் என்று ஆஸ்திரேலிய வீராங்கனை அலைஸா ஹீலி கூறியுள்ளார். 

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும், 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் ஃபைனலுக்கு முன்னேறின. நாளை நடக்கும் ஃபைனலில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

IND vs AUS: எங்க மண்ணுல நாங்க தான்டா கெத்து..! நீங்க ஒயிட்வாஷ் ஆவது உறுதி.. ஆஸ்திரேலியாவை அலறவிடும் தாதா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 172 ரன்களை குவித்தது. 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் டாப் 3 வீராங்கனைகள் 28 ரன்களுக்கே விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். 

அதன்பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 69 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 52 ரன்களுக்கு 15வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 133 ரன்கள். அதன்பின்னர் மற்ற வீராங்கனைகள் கடுமையாக போராடியும் கூட, 20 ஓவரில் 167 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. ஒருவேளை ஹர்மன்ப்ரீத் கௌர் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஹர்மன்ப்ரீத் கௌர் 2 ரன் ஓடும்போது 2வது ரன்னை மெதுவாக ஓடினார் என்று அவர்மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஹர்மன்ப்ரீத் கௌர் ரன் அவுட்டான விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று நாசர் ஹுசைன் விமர்சித்திருந்தார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று ஹர்மன்ப்ரீத் கௌர் மறுத்திருந்ததுடன், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியிருந்தார்.

ஆனாலும் ஹர்மன்ப்ரீத் கௌர் முன்னாள் வீரர், வீராங்கனைகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இந்நிலையில், இதுகுறித்து ஆஸ்திரேலிய வீராங்கனை அலைஸா ஹீலி கருத்து கூறியுள்ளார்.

IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!

இதுகுறித்து பேசிய அலைஸா ஹீலி, ஹர்மன்ப்ரீத் கௌர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அது துரதிர்ஷ்டவசமானது என்றெல்லாம் சொல்வார். ஆனால் அவர் உண்மையாகவே கடினமாக முயற்சித்திருந்தால் அந்த 2 மீட்டரை கடந்து க்ரீஸுக்குள் வந்திருக்கலாம் என்று அலைஸா ஹீலி தெரிவித்தார்.