Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலிக்கு கேட்சை விட்டால் ஆட்டம் குளோஸ் - வங்கதேச அணியின் பயிற்சியாளர் எச்சரிக்கை!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டு வங்கதேச அணியின் பயிற்சியாளர் அல்லான் டொனால்டு கருத்து தெரிவித்துள்ளார்.
 

Allan Donald's plan for Virat Kohli against Bangladesh 2nd test in Dhaka
Author
First Published Dec 21, 2022, 5:11 PM IST

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில், 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் முன்னேறிய சுப்மன் கில், புஜாரா, ஷ்ரேயாஷ் ஐயர்!

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கரை ஒப்பிட்டு வங்கதேச அணியின் பயிற்சியாளர் அல்லான் டொனால்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 3ஆவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலியை 1 ரன்னில் அவுட்டாக்கியிருக்க வேண்டியது. மெஹிடி ஹசன் ஓவரில் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த லிட்டன் தாஸ், விராட் கோலி கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார். இதன் மூலம் அவர் சதம் அடித்து தனது 44ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இஷான் கிஷானின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றின் மூலமாக இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்த ஆண்டில் கோலி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சதம் அடித்துள்ளார். எப்படி சச்சின் டெண்டுல்கருக்கு கேட்ச்சை கோட்டை விட்டால் அது சதத்தை நோக்கி செல்லுமோ, அதே போன்று தான் விராட் கோலிக்கு கேட்சை கோட்டை விட்டால் அது சதத்தை நோக்கி தான் செல்லும். நாங்கள் இப்போது தாகா டெஸ்ட்டுக்கு தயாராகிவிட்டோம். ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே ராகுல் ஆகியோரது விக்கெட் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இந்த தொடரில் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிவிட்டார்.

உலகக் கோப்பையை கையில் வைத்துக் கொண்டே படுத்து தூங்கிய மெஸ்ஸி: வைரலாகும் புகைப்படம்!

இவர்களைத் தொடர்ந்து புஜாரா, சுபமன் கில், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டியை தோற்ற அதே தாகா மைதானத்தில் தான் நாளை 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. இந்தியா 3ஆவது ஒரு நாள் போட்டியில் வென்ற அதே மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் போட்டியையும் கைப்பற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், இந்த மைதானம் யாருக்கு, எப்போது, எப்படி சாதகமாக மாறும் என்பதே புரியாத புதிர். காரணம் என்னவென்றால், முதல் இரு ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தான் வெற்றி பெற வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs BAN 2nd Test: வங்கதேசத்தை ஒயிட் வாஷ் ஆக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சி!

Follow Us:
Download App:
  • android
  • ios