Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியில் மட்டுமே இது சாத்தியம்.. ஒரே சமயத்தில் டெஸ்ட் - டி20 போட்டிகள்..! அகார்கரின் அருமையான அணி தேர்வு

ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு அணிகளை தேர்வு செய்துள்ளார் அஜித் அகார்கர். 
 

ajit agarkar picks two different test and t20 indian teams for the matches held at same time
Author
Chennai, First Published Jun 3, 2020, 5:44 PM IST

இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களே மிதமிஞ்சிய அளவில் உள்ளனர். சில நாட்டு அணிகளில் 11 சிறந்த வீரர்களை தேர்வு செய்வதே கடினம். ஆனால் இந்தியாவில் ஒரே நேரத்தில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடக்கூடிய அளவிற்கு வீரர்கள் உள்ளனர். 

2 வெவ்வேறு அணிகளை வழிநடத்துவதற்கான சிறந்த கேப்டன்களும் உள்ளனர். ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். 

அந்தவகையில், ஒரேநேரத்தில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான, இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை அஜித் அகார்கர் தேர்வு செய்துள்ளார். விராட் கோலி தலைமையில் டெஸ்ட் அணியையும் ரோஹித் சர்மா தலைமையில் டி20 அணியையும் அகார்கர் தேர்வு செய்துள்ளார். 

ajit agarkar picks two different test and t20 indian teams for the matches held at same time

விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் டெஸ்ட் வீரர்களான பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரஹானே, புஜாரா ஆகியோர் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய மூவரையும் அகார்கர் தேர்வு செய்துள்ளார். பும்ராவை ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளார். டெஸ்ட் அணியின் ஸ்பின்னராக அஷ்வினையும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் அகார்கர் தேர்வு செய்துள்ளார். 

ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய வீரர்கள் உள்ளனர். ஸ்பின்னர்களாக குல்தீப் - சாஹல் ஜோடியை தேர்வு செய்துள்ள அகார்கர், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா - புவனேஷ்வர் குமார் ஜோடியுடன் நவ்தீப் சைனியையும் சேர்த்துள்ளார். டி20 அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல்.

ajit agarkar picks two different test and t20 indian teams for the matches held at same time

அகார்கரின் டெஸ்ட் அணி:

பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

12வது வீரர் - ஷுப்மன் கில்.

அகார்கர் தேர்வு செய்த டி20 அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா, 

12வது வீரர் - ஷர்துல் தாகூர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios