IPL 2023: GT vs CSK : பென் ஸ்டோக்ஸ் தான் ஓபனிங்கா? ரஹானே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ள பென் ஸ்டோக்ஸ் குறித்து அஜின்க்ய ரஹானே கருத்து தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஷ்மிகா மந்தனா, தமன்னா உள்ளிட்டோரின் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. அதன் பிறகு ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
போட்டோஷூட்டில் கலந்து கொள்ளாத ரோகித் சர்மா; ஏன், எதற்கு காரணத்தை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்!
இதுவரையில் 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையில் சாம்பியன் பட்டம் பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ் -ஐ வாங்கியதன் மூலம் சென்னை அணியில் மிடில் ஆர்டர் அதிரடியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராயுடு, ஸ்டோக்ஸ், ரஹானே, தோனி என்று இருக்கும் போது ஆல் ரவுண்டர் பட்டியலில் தீபக் சஹாரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில், சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ரஹானே, பென் ஸ்டோக்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சென்னை அணியில் இடம் பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸை தோனி எப்படி பயன்படுத்துவார் என்று இன்று நடக்கும் போட்டியின் மூலமாக தெரியவரும். ஏற்கனவே அவர் பந்து வீசமாட்டார் என்று கூறப்பட்டது. பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்த வேண்டுமோ, அப்படி பயன்படித்துவார். இது தோனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
அதே போன்று ஐபிஎல் தொடர்களில் நான் ஓபனிங் தான் இறங்கி விளையாடியுள்ளேன். அதே போன்று, சென்னை அணியைப் பொறுத்தவரையில் ஓபனிங் தான் களமிறங்குவே என்று நினைக்கிறேன். ஆனால், தோனியும், அணி நிர்வாகமும் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கேற்ப நான் விளையாடவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தோனியின் கீழ் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.
IPL 2023 :தோனிக்கு காயம், ஆடுவதில் சந்தேகம்: ரசிகர்களுக்கு குட் நியுஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ!