Asianet News TamilAsianet News Tamil

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை கண்டிப்பா எடுக்கணும்..! ஜடேஜா அதிரடி

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினை எடுக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து கூறியுள்ளார்.
 

ajay jadeja wants ravichandran ashwin should be in team india for odi world cup
Author
First Published Jan 9, 2023, 10:48 PM IST

2011ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் உலக கோப்பை வெல்லவில்லை. 2013ல் வென்ற சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லவில்லை. 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த 2 டி20 உலக கோப்பைகளில் தற்ற இந்திய அணி, இந்ன்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதற்காக கோர் அணி கட்டமைப்பை சுற்றி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து வலுவான அணியுடன் உலக கோப்பைக்கு செல்வதை உறுதிப்படுத்துவதில் இந்திய அணியும் பிசிசிஐயும் உறுதியாக உள்ளது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. அந்த 20 வீரர்கள் தான் உலக கோப்பை வரை நடக்கவுள்ள அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள். 

என் கிரிக்கெட் கெரியரில் என்னை அச்சுறுத்திய 2பவுலர்கள் இவங்கதான்; ஒருவர் இந்தியர்! ஃபாஃப் டுப்ளெசிஸ் ஓபன் டாக்

ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களை பிசிசிஐ உறுதி செய்துள்ள நிலையில், ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை எடுக்க வேண்டும் என்று அஜய் ஜடேஜா வலியுறுத்தியுள்ளார்.

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான அணியில் வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் தங்களுக்கான இடத்தை பிடித்துவிட்டனர். இவர்கள் தவிர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணியில் இருக்கிறார்கள். 2021 மற்றும் 2022 ஆகிய 2 டி20 உலக கோப்பைகளிலும் அஷ்வின் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் அவரது பணியை சரியாக செய்யவும் இல்லை; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் இல்லை.

விவியன், சச்சின், ஏபிடி-னு எத்தனையோ பேரை பார்த்துருக்கேன்! சூர்யகுமார் மாதிரி வீரரை பார்த்ததில்ல - கபில் தேவ்

ஒருநாள் உலக கோப்பைக்கான அணி தேர்வு குறித்து பேசிய அஜய் ஜடேஜா, அஷ்வினை ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் எடுக்கவேண்டும். ஸ்பின் பவுலிங் மிக முக்கியம். சாஹலை இப்போது ஆடவைக்கவில்லை என்றாலும், உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும். ஜஸ்ப்ரித் பும்ரா கண்டிப்பாக அணியில் இருக்கவேண்டும். ஆனால் தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் பார்த்தால் ஷமியை தேர்வு செய்யமாட்டேன் என்றார் அஜய் ஜடேஜா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios