Asianet News TamilAsianet News Tamil

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே – நவ.15 முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து! மீண்டும் 2019 உலகக் கோப்பையா?

உலகக் கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியைத் தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.

After Pakistan Eliminated from world Cup, IND vs NZ Semi Final Confirmed on November 15 at Wankhede Stadium, Mumbai rsk
Author
First Published Nov 11, 2023, 8:14 PM IST | Last Updated Nov 11, 2023, 8:14 PM IST

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி புதன்கிழமை வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி நடக்கிறது.

Pakistan vs England: அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முதலில் தகுதி பெற்றன. அதன் பிறகு 4ஆவது அணிக்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றன. இதில், இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற அரையிறுதி வாய்ப்பை தனதாக்கியது. எனினும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் வெற்றி, தோல்விக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

England vs Pakistan: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிறைவேறுமா? 6.4 ஓவர்களில் 337 ரன்கள் இலக்கு!

அதன்படி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று இங்கிலாந்து நிர்ணயித்த 337 ரன்களை 6.4 ஓவர்களில் சேஸ் செய்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இருந்த்து. ஆனால், பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்ததோடு, உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அதிரடியால் இங்கிலாந்து 337 ரன்கள் குவிப்பு!

இதன் காரணமாக அரையிறுதிக்கு 4ஆவது அணியாக நியூசிலாந்து முன்னேறியது. மேலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி உறுதி செய்யப்பட்டது. இந்தப் போட்டி வரும் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாடியுள்ளன.

ஒரு மில்லியன் ரசிகர்கள்: அதிக ரசிகர்கள் வருகை என்ற சாதனையை நோக்கி 2023 உலகக் கோப்பை!

இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 74 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும் சேர்த்துக் கொடுத்தாலும் 18 ரன்களில் தோல்வியை தழுவியது. கடைசியாக இந்தியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில், எம்.எஸ்.தோனி ரன் அவுட் செய்யப்பட்டது திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ENG vs PAK: இங்கிலாந்து 300 எடுத்தால் பாகிஸ்தான் 6.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் – இங்கிலாந்து பேட்டிங்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios