எப்படியாவது ஜெயிக்கணும், சோம்நாத் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை செய்த ஹர்திக் பாண்டியா – வைரலாகும் வீடியோ!
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் ஜாலியாக இருக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிவனுக்கு தந்து கையால் அபிஷேகம் செய்தும் தீபாராதனை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு வகையிலான சர்ச்சைகள் நீடித்து வருகிறது. மேலும், பயிற்சியாளர்கள் உடன் ஹர்திக் பாண்டியா கருத்து வேறுபாடு மற்றும் ரோகித் சர்மாவை பீல்டிங்கின் போது அலைக்கழிக்கப்பட்ட வீடியோ வெளியானது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம் எழுந்தது.
இன்னும் ஓரிரு போட்டிகள் வரையில் ஹர்திக் பாண்டியாவிற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் வெற்றி பெறவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மீண்டும் ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
- Hardik Pandya
- Hardik Pandya Poojai at Somnath Temple
- Hardik Pandya at Somnath Temple
- IPL 2024
- IPL 2024 Points Table
- IPL 2024 asianet news
- IPL 2024 schedule
- IPL cricket 2024 live updates
- IPL point table 2024
- MI Points Table
- MI vs DC
- MI vs DC 20th IPL Match
- Mumbai Indians
- Mumbai Indians vs Delhi Capitals 20th Match
- Rohit Sharma
- Somnath Temple
- TATA IPL 2024 news