பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டரை 6 விக்கெட் வித்தியசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி தண்டர் அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஆலிவர் டேவிஸ், டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் ரோஸ், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), குரிந்தர் சந்து, பிரெண்ட டாக்கெட், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீங்க.. கேப்டன்சியில் பாபர் பெரிய ஜீரோ.. கேப்டனுக்கு தகுதியே இல்லாத வீரர்

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

ஜாக் வெதரால்ட், மேத்யூ ஷார்ட், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகர், ஹெண்டி தார்ண்டன், பீட்டர் சிடில் (கேப்டன்).

சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 50 பந்தில் 68 ரன்கள் அடித்தார். ஆலிவர் டேவிஸ் 30 பந்தில் 42 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 150 ரன்கள் அடித்து.

IPL Mini Auction 2023:எந்தஅணிக்கு கேப்டன் தேவை? ஏலத்தில் இடம்பெற்றுள்ள கேப்டன்சிக்கான வீரர்கள் யார்? ஓர் அலசல்

151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 44 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் விளாசினார். கிறிஸ் லின் மற்றும் ஆடம் ஹோஸ் ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் அடிக்க 19 ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.