IPL 2023: ஐபிஎல் டிக்கெட்டுகள் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு? விளக்கமளித்த சிஎஸ்கே நிர்வாகம்!
வரும் 21 ஆம் தேதி நடக்கவுள்ள ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் 10 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்துவிடுவதாக நிர்வாகிகள் கூறுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பெங்களூரு மைதானத்தில் நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடந்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதன்படி, 1,500, 2000 மற்றும் 2500 ஆகிய விலை டிக்கெட்டுகள் மட்டும் கவுண்டரில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
IPL 2023: ஹாட்ரிக் வெற்றிக்கு போட்டி போடும் மும்பை - ஹைதராபாத் மோதல்; உத்தேச ஆடும் 11!
ஹைதராபாத் மற்றும் சென்னை அணி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். இந்த நிலையில், தான் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக நிர்வாகிகள் காண்பிப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி கவுண்டரில் 5000 டிக்கெட்டுகள் கூட விற்பகப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!
ரூ.1500 டிக்கெட் மட்டுமே கவுண்டரில் விற்பனை செய்யப்படுகிறது, ஆனால், 2000 முதல் 5000 ரூபாயிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பானை செய்யப்படுகிறது. இதே நிலைதான் ஒவ்வொரு போட்டிக்கும் நடக்கிறது. சிஎஸ்கே நிர்வாகமே ஆன்லைன் டிக்கெட்டுகளை பதுக்குவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தான் இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எந்த டிக்கெட்டையும் பதுக்கவில்லை. வேறொரு தனியார் நிறுவனம் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.