ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியால் அந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாததுதான், தோல்வியை விட கொடுமையான விஷயமாக அமைந்தது. 

இதையடுத்து, தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் ஆடிய இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 340 ரன்களை குவித்தது. 341 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 304 ரன்களில் சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

Also Read - அடுத்தடுத்த யார்க்கரில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட ஷமி.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வீடியோ

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். ரிஷப் பண்ட் காயத்தால் ஆடாததால், இரண்டு போட்டிகளிலுமே ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். மிக அருமையாகவே கீப்பிங் செய்தார் ராகுல். 

அதிலும் இந்த போட்டியில், ஆரோன் ஃபின்ச்சை அபாரமாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார். வார்னர் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த பிறகு, ஃபின்ச்சும் ஸ்மித்தும் சேர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது, ஜடேஜாவின் பந்தில் ஃபின்ச்சை ஸ்டம்பிங் செய்தார் ராகுல். அது மிகவும் க்ளோசான ஸ்டம்பிங். ஜடேஜாவின் பந்தை அடிக்க முயன்ற ஃபின்ச், பந்தை விட்டதுமே, உடனடியாக காலை க்ரீஸுக்குள் கொண்டுவர முயன்றார். அவரது கால் கிரீஸின் மேல் பட்டது. ஆனால் கிரீஸுக்குள் செல்லவில்லை. 

Also Read - சதத்தை நூலிழையில் தவறவிட்ட ஸ்மித்.. திருப்புமுனையை ஏற்படுத்திய குல்தீப்.. இந்திய அணி அபார வெற்றி

அதை ரிவியூ செய்து பார்த்த தேர்டு அம்பயருக்கே, அதுகுறித்து முடிவெடுப்பது கடும் சவாலாக இருந்தது. ஏனெனில் ஃபின்ச்சின் கால், கிரீஸின் மேல் இருந்தது. அதனால் தேர்டு அம்பயருக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதையடுத்து அனைத்து ஆங்கிள்களிலும் அதை ஆராய்ந்த தேர்டு அம்பயர், அதற்கு அவுட் கொடுத்தார்.

ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு வழங்கி, நாட் அவுட் கொடுப்பதுதான் விதி. ஆனால் தேர்டு அம்பயர் சந்தேகத்தின் பலனை ஃபீல்டிங் அணிக்கு வழங்கி பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சித்துவருகின்றனர்.