ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 81 ரன்களை சேர்த்தனர். 44 பந்தில் 42 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி சிறப்பாக ஆடினார். 

Also Read - பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் வேற லெவல்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக அசத்தும் ஸ்டோக்ஸ்.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம்

தவானும் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடி சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 96 ரன்கள் அடித்த தவான், 4 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். தையடுத்து களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மந்தமாக பேட்டிங் ஆடி 17 பந்தில் 7 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வழக்கம்போலவே சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துகொண்டிருந்த கோலி, ஸாம்பாவின் பந்தை ஸ்டிரைட் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்ற அந்த பந்தை லாங் ஆஃபில் இருந்த ஃபீல்டர் பிடித்து களத்திற்குள் இருந்த ஸ்டார்க்கிடம் தூக்கிப்போட, ஸ்டார்க் அதை கேட்ச் பிடித்தார். இதையடுத்து கோலி 78 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மனீஷ் பாண்டே வெறும் 2 ரன்னில் நடையை கட்ட, முழு பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்த கேஎல் ராகுல், டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். அதிரடியாக ஆடிய ராகுல், 38 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் முடிந்தவரை அடித்து ஆடிய ராகுல், 46,47,48வது ஓவர்களில் அடித்து ஆடினார். 52 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்த ராகுல், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ரன் அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது.

Also Read - சுயநலத்தோட ஆடுன நிறைய வீரர்களை என் கெரியரில் பார்த்துருக்கேன்.. ஆனால் கோலி கிரேட்.. மனதார பாராட்டிய கம்பீர்

341 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னரை ஆரம்பத்திலேயே ஷமி வீழ்த்திவிட்டார். வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக தொடங்கி, விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடினர். களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆட தொடங்கினர். ஷமி மற்றும் சைனியின் ஓவர்களில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்திவிட்டு, மீண்டும் நிதானத்தை கடைபிடிக்க தொடங்கினர். 

Also Read - போக்குக்காட்டிய தோனிக்கு ஆப்பு அடித்த பிசிசிஐ.. தோனியின் கெரியர் ஓவர்

இவ்வாறு இருவரும் சாமர்த்தியமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தில் சற்று அசந்த ஃபின்ச்சை அபாரமாக ஸ்டம்பிங் செய்து அனுப்பினார் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல். ராகுல் பார்ட் டைம் விக்கெட் கீப்பரை போல அல்லாமல், மிகச்சிறப்பாக கீப்பிங் செய்தார். அவரையே நிரந்தர விக்கெட் கீப்பராக்கிவிடலாம் என்ற அளவிற்கு சிறப்பாக இருந்தது அவரது கீப்பிங். 

அதன்பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார் லபுஷேன். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய லபுஷேன், வெகு சிறப்பாக ஆடினார். நெருக்கடியான நிலையில், முதல் இன்னிங்ஸை ஆட வந்த லபுஷேன், எந்தவித பதற்றமோ தடுமாற்றமோ இல்லாமல், பும்ரா, ஷமி, குல்தீப், ஜடேஜா, சைனி ஆகியோரின் பவுலிங்கை எதிர்கொண்டு சிறப்பாக அடித்து ஆடினார். ஸ்மித்தும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். 

ஸ்மித் - லபுஷேன் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. லபுஷேன், 46 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் தூக்கியடித்து ஆட்டமிழந்தார். அறிமுக இன்னிங்ஸில் அரைசதத்தை வெறும் 4 ரன்களில் தவறவிட்டார். ஸ்மித் - லபுஷேன் பார்ட்னர்ஷிப்பை உடைத்து பிரேக் கொடுத்தார் ஜடேஜா. 

அதைவிட பெரிய பிரேக் என்றால் அது குல்தீப் கொடுத்ததுதான். லபுஷேன் ஆட்டமிழந்த பிறகும், ஸ்மித் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்தார். இதற்கிடையே அலெக்ஸ் கேரி 18 ரன்களில் ஆட்டமிழக்க, இவையெதுவுமே ஸ்மித்தின் ஆட்டத்தை பாதிக்கவேயில்லை. சிறப்பாக ஆடிய ஸ்மித், சதத்தை நெருங்கினார். ஆனால் 98 ரன்களில் அவரை போல்டாக்கி இந்திய அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து கொடுத்தார் குல்தீப் யாதவ். 

Also Read - தாதாவுக்கு நான் போட்ட கண்டிஷன்.. சேவாக் சொன்னதை கேட்டு சிரித்த கங்குலி

ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால், இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகியிருக்கும். அந்தவகையில் சரியான நேரத்தில் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார் குல்தீப் யாதவ். அதன்பின்னர் அஷ்டன் அகர் அடித்து ஆடினார். ஆனாலும் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்ரேட் அதிகமாகிக்கொண்டே இருந்ததால், ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அந்த அழுத்தத்திலேயே அஷ்டன் டர்னர், அகர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். தொடர் 1-1 என சமன் அடைந்துள்ளதால், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். கடைசி போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது.