Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித், கோலி, ரிஷப் பண்ட் இல்லை..? ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் 15வது சீசனில் ஆடியதன் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அந்த அணியில் ரோஹித், கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.
 

aakash chopra picks t20 world cup squad depends on ipl 2022 performances
Author
Chennai, First Published Jun 1, 2022, 3:37 PM IST

டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு, ஐபிஎல்லை சில வீரர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.

குறிப்பாக ஃபிட்னெஸ் கேள்விக்குறியாக இருந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லில் அபாரமாக பேட்டிங் ஆடியதுடன், தனது முழு பவுலிங் கோட்டாவையும் சிறப்பாக வீசுமளவிற்கு ஃபிட்னெஸுடன் இருப்பதை நிரூபித்தும் காட்டினார். கேப்டன்சியிலும் அசத்தி, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தினார். அதன்விளைவாக டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி ஆகிய பேட்ஸ்மேன்களும், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய பவுலர்களும் அபாரமாக பந்துவீசி அசத்தினர். இவர்களில் திரிபாதியை தவிர மற்ற வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் 15வது சீசனில் வீரர்கள் ஆடியதன் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்த சீசனில் ரோஹித், கோலி, ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சரியாக ஆடாததால் அவர்கள் மூவரையும் அணியில் எடுக்கவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அவர் தேர்வு செய்துள்ள அணியில் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷமி, பும்ரா ஆகிய ரெகுலர் வீரர்கள் தவிர ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய திரிபாதி, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், சாஹல் ஆவேஷ் கான் ஆகிய வீரர்களையும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் அடிப்படையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

கேஎல் ராகுல், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், க்ருணல் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios