ஐபிஎல் 15வது சீசனில் இன்று சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் முதல் போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவனையும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அந்த அணிகளை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் இன்று மும்பை வான்கடேவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கேவும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆரும் மோதுகின்றன.
கடந்த சீசனின் ஃபைனலில் மோதிய சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி ஆடுகிறது. எனவே சிஎஸ்கே அணி மீது அனைவரின் பார்வையும் உள்ளது. கேகேஆர் அணியும் இந்த சீசனில் புதிய கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது.
இந்த போட்டிக்கான சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் நியூசிலாந்தின் டெவான் கான்வே ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். அடுத்தடுத்த வரிசைகளில் உத்தப்பா, ராயுடு, ஜடேஜா, தோனி ஆகியோரும், ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, பிராவோ, கிறிஸ் ஜோர்டான் ஆகியோருடன் இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகரையும் தேர்வு செய்துள்ளார் சோப்ரா. மேலும் ஃபாஸ்ட் பவுலராக ஆடம் மில்னேவையும் தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே.
கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை 3ம் வரிசையிலும், ராணாவை 4ம் வரிசை வீரராகவும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ். ஃபினிஷர் ஆண்ட்ரே ரசல். ஸ்பின் ஆல்ரவுண்டர் சுனில் நரைனுடன் மற்றொரு ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தியையும், ஃபாஸ்ட் பவுலர்களாக சாமிகா கருணரத்னே, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சாமிகா கருணரத்னே, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
