உலகக் கோப்பையை உற்று பார்த்தவாறு இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், வடிவேலுவின் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட மீம்ஸ் உருவாக காரணமாக அமைந்துள்ளார்.

கிரிக்கெட் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகளைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடக்க இருந்த உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக கேப்டன்ஸ் டே என்று சொல்லப்படும் 10 அணிகளின் கேப்டன்களின் மீட்டிங் மட்டுமே நேற்று நடந்தது. குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸின் Banquet Hallல் வைத்து கேப்டன்களின் அணிவகுப்பு நிழ்ச்சி நடந்தது. இதில், 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

பாபர் அசாமிடம் ஹைதராபாத் பிரியாணி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரியாணி நன்றாக இருந்ததாகவும், இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வே இல்லை என்றும், தங்களுக்கு தங்களது நாட்டில் இருப்பது போன்ற உணர்வு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரோகித் சர்மாவிடம் பத்திரிக்கையாளர் CWC 2019 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே கோப்பை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, அது என்னுடைய வேலை இல்லை என்பது போன்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவருக்கு புரியும் படி இந்த கேள்வியை மொழி பெயர்த்துள்ளார்.

ENG vs NZ: 2019 உலகக் கோப்பைக்கு பழி தீர்க்குமா நியூசிலாந்து? அகமதாபாத்தில் ENG vs NZ பலப்பரீட்சை!

கேப்டன்களின் மீட்டிங் முடிந்த பிறகு உலகக் கோப்பை டிராபியுடன் கேப்டன்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டும் உலகக் கோப்பையை டிராபியை உற்று பார்த்தவாறு இருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி இந்தப் புகைப்படத்தை வைத்து வடிவேலு நடிப்பில் வந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் வரும் டயலாக்கை ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ஆம், அதுதான் அங்கு என்ன தெரிகிறது? என்ற டயலாக்.

விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு முடிவுகட்டிய டெல்லி நீதிமன்றம்

உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Scroll to load tweet…