உலகக் கோப்பையில் அட்டவணையில் மாற்றமா? பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்!
உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பிச்சிஐக்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை கடந்த ஜூன் மாத இறுதியில் மும்பையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் போட்டிகள் நடக்க உள்ளது. 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 9 மைதானங்கள்லும் லீக் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 15 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நவராத்திரி விழா மற்றும் பாதுகாப்பு காரணமாக போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த போட்டி மட்டுமின்றி, மற்ற 9 போட்டிகளின் தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டது.
செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?
அதுமட்டுமின்றி ஹைதராபாத் மைதானத்தில் அக்டோபர் 12 ஆம் தேதி நடக்க இருந்த பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. அக்டோபர் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த இரு போட்டிகளையும் மாற்றியமைக்குமாறு பிசிசிஐக்கு ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களி போட்டிகள் நடத்தப்படுவது கடினமான ஒன்று. ஆதலால், போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் வாரியம் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளது.