பாகிஸ்தானில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதலில் டி20 தொடரும் பின்னர் ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளன.
அதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில், அந்த அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் ஷெல்டான் காட்ரெல், ஆல்ரவுண்டர்கள் ரோஸ்டான் சேஸ் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய மூவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

அவர்கள் அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, வீரர்கள் பயோபபுளில் இருக்கும் போதும், ஒருசிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மூவருக்கு கொரோனா உறுதியானாலும், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நாளை(டிசம்பர் 13) தொடங்குகிறது.
