IPL 2023: கோப்பையை வென்றால் சிஎஸ்கே படைக்கப்போகும் அபாரமான சாதனைகள்..!

ஐபிஎல் 16வது சீசனின் ஃபைனலில் ஜெயித்து கோப்பையை வென்றால் சிஎஸ்கே அணி படைக்கப்போகும் சாதனைகளை பார்ப்போம்.
 

3 records csk can break if they win ipl 2023 title

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகும். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்று அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக திகழ்கிறது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறை கோப்பையை வென்று, அதிக முறை ஐபிஎல் டைட்டிலை ஜெயித்த 2வது அணியாக திகழ்கிறது. 2 சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களில் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே அணி 10 முறை ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

IPL 2023: அவங்க 2 பேரும் இல்லாததுதான் மும்பை அணியின் தோல்விக்கு காரணம்..! பயிற்சியாளர் மார்க் பௌச்சர் அதிரடி

இந்த சீசனிலும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே அணி, ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. நாளை (மே 28) அகமதாபாத்தில் நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே அணி ஜெயித்தால் 5வது முறையாக கோப்பையை வெல்லும். இந்த முறையும் கோப்பையை வென்றால் சிஎஸ்கே அணி படைக்கப்போகும் சாதனைகளை பார்ப்போம்.

1. சிஎஸ்கே அணி இந்த சீசனிலும் கோப்பையை வென்றால், 5வது முறையாக கோப்பையை வென்று அதிக முறை டைட்டில் ஜெயித்த அணி என்ற மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்யும்.

2. இந்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை ஜெயித்தால் ஐபிஎல் கோப்பையை ஜெயித்த வயது முதிர்ந்த கேப்டன் (41) என்ற சாதனையை தோனி படைப்பார்.

IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்

3. ஃபைனலில் ருதுராஜ் கெய்க்வாட் 36 ரன்கள் அடித்து சிஎஸ்கே கோப்பையை வென்றால், ஐபிஎல்லில் கோப்பையை வென்ற அணிக்கு 2 முறை 600 ரன்களுக்கு மேல் பங்களிப்பு செய்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைப்பார். இதற்கு முன் 2021ல் சிஎஸ்கே கோப்பையை ஜெயித்தபோதும் ருதுராஜ் 600 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios