IPL 2023: அவங்க 2 பேரும் இல்லாததுதான் மும்பை அணியின் தோல்விக்கு காரணம்..! பயிற்சியாளர் மார்க் பௌச்சர் அதிரடி
ஜஸ்ப்ரித் பும்ராவும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் இல்லாததுதான் மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 16வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸும், முதல் தகுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதின. இந்த போட்டியில் காட்டடி அடித்து சதம் விளாசிய ஷுப்மன் கில் 129 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 233 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 171 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸை சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்
இந்த சீசன் முழுக்கவே மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் அபாரமாக இருந்திருக்கிறது. திலக் வர்மா, நெஹல் வதேரா, கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் அபாரமாக ஆடியிருக்கின்றனர். இவர்களில் க்ரீன் மற்றும் சூர்யகுமார் சதமும் அடித்தனர். அதிரடியான பேட்டிங்கால் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்குகளை விரட்டி மும்பை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்த சீசனில் மும்பை அணியின் பவுலிங் பலவீனமாக இருந்தது. அதனால் தான் எதிரணிகள் மும்பைக்கு எதிராக அசால்ட்டாக 200 ரன்களுக்கு மேல் குவித்தன.
மும்பை அணியின் மேட்ச் வின்னிங் பவுலரான பும்ரா ஆடாததுதான் அந்த அணியின் பவுலிங் பலவீனத்திற்கு காரணம். அவரது இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரும் பழையபடி பந்துவீச முடியாததுடன், சீசனின் பாதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். இவர்கள் இருவரும் ஆடாததுதான் மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியுள்ளார்.
ICC WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்
இதுகுறித்து பேசிய மார்க் பௌச்சர், பும்ரா காயத்தால் ஆடவில்லை. ஆர்ச்சரும் பாதியிலேயே சென்றுவிட்டார். 2 தரமான வீரர்கள் இல்லாததுதான் அணியில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அதுதான் பெரிய பிரச்னையாக அமைந்துவிட்டது. நான் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. இதுமாதிரியான காயங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை சமாளித்துத்தான் ஆடியாக வேண்டும் என்றார் பௌச்சர்.