மேகாலயா மற்றும் நாகாலாந்து அணிகளுக்கு இடையேயான அண்டர் 16 விஜய் மெர்ச்சண்ட் டிராபி போட்டி அசாமில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் மேகாலயா ஸ்பின்னர் நிர்தேஷ் பைசோயா, நாகாலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டார். 

அந்த ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்துள்ளது. அதை நன்கு பயன்படுத்திய நிர்தேஷ் பைசோயா, அபாரமாக பந்துவீசி நன்றாக பந்தை சுழலவிட்டுள்ளார். அவரது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத நாகாலாந்து வீரர்கள் அனைவரும் அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

51 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் நிர்தேஷ். இதற்கு முன்னதாக வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங்கும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.