வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைவதற்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா? இது தெரியாமல் பூஜை பண்ணாதீங்க!
Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியில் வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபட்டால் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். அதன் பின்னணி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் பகவான் கிருஷ்ணரே நம்முடைய வீட்டிற்கு வருவார் என காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அந்த நன்னாளில் திருமணமான தம்பதியினர் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பார்கள். அந்த விரதத்தின் பலனாக அவர்களுக்கு கிருஷ்ணரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.
ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என விரதம் இருக்கக் கூடாது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் சீக்கிரமாக எழுந்து வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள கிருஷ்ணர் உருவ சிலை அல்லது கிருஷ்ணர் படத்தை சுத்தமாக துடைத்து பூ அலங்காரம் செய்யுங்கள். சுண்ணாம்பு தூளால் இன்றி அரிசி மாவு கொண்டு கோலமிடுங்கள். வாசலில் மாவிலையால் தோரணங்கள் கட்டி மங்களகரமாக அலங்கரிக்க வேண்டும்.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி 2024 : விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்!
வீட்டு பூஜையறையை தூய்மை செய்து பூக்களால் கடவுள்களை ஆராதிக்க வேண்டும். கிருஷ்ணனுக்கு விருப்பமான வெண்ணெய், சர்க்கரை, அவல், அதிரசம், முறுக்கு, இனிப்பு சீடைகள் ஆகியவற்றை படைக்க வேண்டும். இதன் பிறகு தான் அரிசிமாவை வைத்து குழந்தையின் காலடி தடங்களை வீட்டு வாசல் தொடங்கி பூஜையறை வரையிலும் அச்சாக பதிக்க வேண்டும். இதுவே பகவான் கிருஷ்ணணை வரவேற்கும் முறை. உங்கள் மனத்தூய்மையோடு இதனை செய்தால் கிருஷ்ணர் வருவார் என்பது ஐதீகம். ஆனால் கிருஷ்ண ஜெயந்தியில் மட்டும் ஏன் பாதங்களை வரைகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது? கிருஷ்ணரை இப்படி வழிபடுங்க.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்!
பாலகன் கிருஷ்ணர் பாகுபாடில்லாமல் பழகுபவர். பாரபட்சம் பார்க்காமல் யார் வீட்டுக்குள் வேண்டுமானாலும் சென்று உறியில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணெய்யை எடுக்க செல்வாராம். லாவகமாக கல்லால் அடித்து வெண்ணைய் வைத்திருக்கும் உறியை உடைப்பதில் அவர் கில்லாடி. தரையில் சிந்தியுள்ள வெண்ணெய்யை கண்டு கொள்ளாமல் அதன் மீதே நடந்து வெண்ணெய்யை சுவைத்தபடியே வெளியேறிவிடுவார் கிருஷ்ணர். அவரின் பாத அச்சு வெண்ணெய்யில் அப்படியே பதிந்திருக்கும். இந்த சம்பவத்தை நினைவூட்டும் விதமாகவே கிருஷ்ணர் ஜெயந்தியில் பாதம் வரையப்படுகிறது. இதனால் பகவான் கிருஷ்ணர் வீடு தேடி வருவார் என நம்பப்படுகிறது.
கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்:
- எந்த வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபாடு செய்கிறார்களோ அங்கு கன்ணபிரான் எல்லா நன்மைகளையும் அருள்வார் என்பது ஐதீகம்.
- குழந்தை வரம் வேண்டுவோர் கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் பங்கேற்பது நல்லது. வீட்டில் நிலவும் தரித்திரங்களை விலக்கி ஐஸ்வர்யங்களை அருள்வார் கிருஷ்ணர். நம்பிக்கையார் பூஜை செய்யுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D