கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது? கிருஷ்ணரை இப்படி வழிபடுங்க.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்!
Krishna Jayanthi 2024 : இந்த 2024 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி எப்போது? வழிபாட்டு முறை மற்றும் பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
விஷ்ணுவின் 8வது அவதாரம்தான் கிருஷ்ண அவதாரம் ஆகும். பகவான் கிருஷ்ணராக அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயரில் நாம் கொண்டாடுகிறோம். மேலும், கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளில், விரதம் இருந்து அவரை வழிபட்டால் கிருஷ்ணரே நம் வீட்டிற்கு வந்து அருள் புரிவதாக சொல்லப்படுகிறது.
2024 கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கும் முறை :
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்க விரும்பும் பக்தர்கள், கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தினம் ஒருவேளை மட்டுமே உணவை சாப்பிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பிறகு கிருஷ்ண ஜெயந்தி அன்று நாள் முழுவதும் உன்னை ஏதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். பெண் கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஏனெனில், ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் நிறைவடையும் வரை கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் விதி. எனவே, இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, கிருஷ்ணர் ஜெயந்தி விரதத்தை கடைபிடியுங்கள்.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி அன்று 'இந்த' பொருட்களை உங்க வீட்டில் வையுங்க...வீட்டில் ஒருபோதும் குறைவு இருக்காது..!!
2024 கிருஷ்ண ஜெயந்தி எப்போது?
இந்த 2024 ஆம் ஆண்டு கிருஷ்ணன் ஜெயந்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. எனவே, இந்த நாளில் கிருஷ்ணரை நினைத்து விரதம் இருந்து வழிப்பட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: கண்ணனை அழைக்க தயக்கமா.. எப்படி கூப்பிட்டால் கண்ணன் வருவான்!
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடும் முறை :
கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பிறகு வீட்டை சுத்தம் செய்து அரிசிமாவினால் கோலமும் போட்டு, மாவிலையால் தோரணங்கள் அமைக்க வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை போட வேண்டும் இப்படி செய்தால், குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்கு அழைப்பதாக அர்த்தம். அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டில் பூஜை அறையில் கிருஷ்ணரின் படத்தை வைத்து, பூக்களால் அலங்கரித்து, கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளான வெண்ணெய் சர்க்கரை அவள் முறுக்கு போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்து வழிபட்டு பூஜையை நிறைவு செய்யுங்கள். மேலும் அந்நாளில் சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் கதைகளை சொல்ல வேண்டும். முக்கியமாக, கிருஷ்ண ஜெயந்தி என்று கிருஷ்ணரை காலையில் வழிபடுவதை விட மாலையில் வழிபடுவது தான். ஏனென்றால் கிருஷ்ணர் நள்ளிரவில் தான் பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றது.
2024 கிருஷ்ண ஜெயந்தி விரத பலன்கள் :
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து கிருஷ்ணரை குழந்தையாக நினைத்து வழிபட வேண்டும். இந்நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் மற்றும் மகாலட்சுமி பரிபூரண அருள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, குழந்தை இல்லாதவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து குழந்தை கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D