கிருஷ்ண ஜெயந்தி 2024 : விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்!

Krishna Jayanthi Vratham Rules 2024 : கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

krishna jayanthi 2024 dos and donts to follow while vratham in tamil mks

கிருஷ்ணர் பிறந்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மேலும், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றுதான் ஆகும். அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டு 26 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகின்றது.

அந்த வகையில், அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 7:30 வரை உள்ளது. அதே சமயம் ரோகிணி நட்சத்திரமானது, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு 9:41 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 8:54 மணி வரை இருக்கும். ரோகினி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் இணைந்து வரும் நேரம் இரவு நேரம் என்பதால், அது கிருஷ்ணன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை வேலையில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் பக்தர்கள் 24 மணி நேரமும் விரதத்தை கடைப்பிடித்து நள்ளிரவில் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அன்னாளில் நீங்களும் விரதம் இருக்க விரும்பினால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க:  கிருஷ்ண ஜெயந்தி தின தொடர் விடுமுறை.! சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எங்கே இருந்து எங்கே தெரியுமா.?

செய்ய வேண்டியவை : 

  • கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். அதுபோல அரசியல் சமைத்து உணவை தவிர ஜவ்வரிசி கஞ்சி சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம்.
  • அதுமட்டுமின்றி, அந்நாளில் விரதம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை தானமாக செய்வது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்படி செய்தால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்குமாம்.
  • மேலும் அந்நாளில் பசுக்களுக்கு உணவு அளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.
  • விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாக இல்லாமல் முழு ஆற்றலுடன் இருக்க பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.

இதையும் படிங்க:  கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது? கிருஷ்ணரை இப்படி வழிபடுங்க.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்!

செய்யக்கூடாதவை :

  • கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டில் வெங்காயம், பூண்டு பயன்படுத்தவே கூடாது. வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவை தான் வீட்டில் சமைக்க வெங்காயம்.
  • அதுபோல இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. 
  • விரதம் இருப்பவர்கள் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். 
  • விரதம் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், பால், பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios