கிருஷ்ண ஜெயந்தி தின தொடர் விடுமுறை.! சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எங்கே இருந்து எங்கே தெரியுமா.?
கிருஷ்ண ஜெயந்தி, தொடர் விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் செல்லும். முன்பதிவு செய்து பயணிக்க அரசு வலியுறுத்தி உள்ளது.
தொடர் விடுமுறை- சிறப்பு பேருந்து
வேலைக்காக லட்டசக்கணக்கான மக்கள் சொந்த ஊரை விட்டு சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மட்டும் தங்களது உறவினர்களை பார்க்க செல்கின்றனர். அந்த வகையில் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என தொடர் விடுமுறை தினங்களில் கூட்டம் கூட்டமாக ரயில், பேருந்துகளில் மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வருகிற சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சுபமுகூர்த்தம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி
தொடர் விடுமுறை, முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் - அவர்களின் தகவல் ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழ.மை சுபமூகூர்த்தம், 24ஆம் தேதி சனிக்கிழமை, 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26ஆபம் தேதி கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விடுமுறை தினங்களையொட்டி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் சிறப்ப பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து
அதன் படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் 24 ஆம் தேதி சனிக் கிழமை ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், இதன் தொடர்ந்து 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி அன்று 70 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து வெள்ள மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய அழைப்பு
மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,008 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,085 பயணிகளும் ஞாயிறு அன்று 5,161 பயணிகளும் மற்றும் திங்கள் அன்று 5,166 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.