பணம் வற்றாமல் பெருக சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை வீட்டில் இப்படி வைங்க!! 

Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டின் எந்த பகுதில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

vinayagar chaturthi 2024 where to keep vinayagar idol at home in tamil mks

நன்றியின் கடவுளாக சொல்லப்படுவர் விநாயகர். தனது பக்தர்களுக்கு செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளி அள்ளி கொடுப்பவர். அவரின் அருளை பெற மக்கள் அவர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவார்கள். சிலருக்கு விநாயகரின் சிலையை எப்படி, எந்த இடத்தில் வழிபடுவது என தெரியாது. வாஸ்துபடி, சில இடங்களில் வைத்து வழிபடுவது செல்வ செழிப்பை தரும். 

வெள்ளை விநாயகர் சிலை: 

வீட்டில் அதிக செல்வம் பெருகி மகிழ்ச்சியும் நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டுமென்றால் வெள்ளை விநாயகர் சிலை நிறுவலாம்.  வெள்ளை விநாயகருக்கு ஸ்வேத கணபதி எனவும் ஒரு பெயருண்டு. வீட்டில் இந்த சிலையை வைத்தால் பெரிய மாற்றம் வரும். வீட்டிற்கு வெளியில் கடவுளின் முதுகு எதிர்கொள்ளும் மாதிரி வெள்ளை விநாயகரை நிறுவினால் செல்வம் வற்றாமல் இருக்கும். 

விநாயகர் சிலை நிறுவும் திசைகள்: 

வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் விநாயகர் சிலையை வைப்பது நல்ல பலன்களை தரும். 

இதையும் படிங்க:  விநாயகர் சதுர்த்தி 2024 : தேதி, நேரம் முக்கியத்துவம் மற்றும் பூஜை விதி..

விநாயகர் சிலை வைக்கக் கூடாத இடங்கள்:

மறந்து கூட வீட்டின் தெற்கு திசையில் விநாயகர் சிலையை வைக்கவே கூடாது. கழிப்பறை, குளியலறைக்கு அருகில் வைக்கக் கூடாது. அந்த சுவருடன் இணைந்துள்ள இடத்திலும் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது. கழிவறை, குளியலறையில் எதிர்மறை சக்தி வெளிப்படும். இது பூஜை அறையில் உள்ள நேர்மறையான ஆற்றலை மோசமாக பாதிக்கும்.

நாம் கால் வைத்து ஏறி செல்லும் படிக்கட்டுகளுக்கு கீழே அல்லது அருகே விநாயகர் சிலை நிறுவி வழிபடக் கூடாது. படிக்கட்டுக்கு கீழே இடம் இருக்கிறது என அங்கே விநாயகரை நிறுவி, கடவுளை மிதிப்பது வீட்டுக்கு நல்லதல்ல. 

படுக்கையறையில் வைக்கலாமா? 

படுக்கையறையில் விநாயகர் சிலை வைக்கக் கூடாது. அதனால் கெட்ட பலன்கள் தான் கிடைக்கும். வழிபட வேறு இடம் இல்லாதபட்சத்தில்,  படுக்கையறையின் வடகிழக்கு மூலையில் சிலை நிறுவி வழிபடலாம். ஆனால் சிலைக்கு நேராக கால் நீட்டி தூங்கக் கூடாது. 

இதையும் படிங்க:  விநாயகர் சதுர்த்திக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா? சுவாரஸ்யமான தகவல்கள்!!  

வாஸ்து தோஷம் நீங்க! 
 
வாஸ்படிக விநாயகரை வீட்டில் வைத்தால் எல்லா வாஸ்து தோஷங்களும் நீக்கும். இந்த சிலை விலை உயர்ந்ததாக இருந்தாலும் வாழ்க்கையை உடனடியாக மாற்றும் சக்தி கொண்டது. 

 எந்த மாதிரியான விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்கலாம்? மா, சந்தனம் மற்றும் வேப்ப மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவற்றை வாசலில் வைப்பது நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கிறது. வாழ்வில் சிக்கல்களே இல்லாமல் சுமுகமாக இருக்க வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி, மஞ்சளால் செய்த சிலையை வைத்து வழிபடலாம். 

வீட்டில் சிலை செய்து வழிபடலாமா? 

வீட்டில் அசுத்தமில்லாத பொருள்களை வைத்து நாமே விநாயகர் சிலை செய்து வழிபடலாம். இதனால்  எதிர்காலம் பிரகாசம் அடையும். துன்ப துயரங்கள் விலகும்.  அசுத்தமான பொருட்களால் சிலை செய்தால் எதிர்மறையான விளைவுகள் தான் வரும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios