விநாயகர் சதுர்த்தி 2024 : தேதி, நேரம் முக்கியத்துவம் மற்றும் பூஜை விதி..

Vinayagar Chaturthi 2024 : இந்த 2024 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது? நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

vinayagar chaturthi 2024 date time significance and puja vidhi in tamil mks

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி ஆகும்.  விநாயகர் முழு முதற்கடவுளாக அவதரித்த நாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். அதுபோல, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் தான் விநாயகர் அவதாரம் செய்ததாகவும் புராணங்கள் சொல்வதால், ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாதம் விநாயகரை வழிபடுவதற்குரிய மாதமாகும். விநாயகர் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் ஆவார்.

இதையும் படிங்க:  செப்டம்பர் மாதத்தில் 15 நாட்களுக்கு பேங்க் லீவு.. விநாயகர் சதுர்த்திக்கு வங்கி விடுமுறையா? செக் பண்ணுங்க

விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது?:

விநாயகர் சதுர்த்தியானது 10 நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்த வகையில், இந்த 2024 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆனது செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று  தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று முடிவடைகிறது. ஆனால், செப்டம்பர் 7ஆம் தேதி தான் சூரிய உதய காலத்தின் போது சதுர்த்தி திதி உள்ளதால், அந்த நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் 10வது நாள் தான் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

2024 விநாயகர் சதுர்த்தி தொடங்கும் நாள் :  7 செப்டம்பர் (சனிக்கிழமை)

2024 விநாயகர் சதுர்த்தி பூஜை திதி ஆரம்பம் : 6 செப்டம்பர் (வெள்ளிக்கிழமை) மாலை 3:01 மணிக்கு

2024 விநாயகர் சதுர்த்தி பூஜை முகூர்த்தம் : 7 செப்டம்பர் காலை 11 மணி முதல் மதியம் 1:34 வரை

2024 விநாயகர் சதுர்த்தி பூஜை திதி முடிவு : 7 செப்டம்பர் மாலை 5.37 மணிக்கு

2024 விநாயகர் சதுர்த்தி முடியும் நாள் : 17 செப்டம்பர் (செவ்வாய்க்கிழமை)

இதையும் படிங்க: Vinayagar Chaturthi : விநாயகர் சதுர்த்தி! வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? இதற்கெல்லாம் அனுமதியே கிடையாது!

2024 விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம் : 

விநாயகர் சதுர்த்தி இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு விநாயகப் பெருமான் அறிவையும் பொறுமையும் அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு நபர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற இந்த பண்புகள் மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி, இந்நாளில் விநாயகர் பெருமானே முழு மனதுடன் வழிப்பட்டால் வாழ்க்கையில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி பூஜை விதி 2024 :

விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, நீராடி சுத்தமான ஆடை அணிய வேண்டும். பிறகு விநாயகருக்கு சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடை அமைத்து அதில் விநாயகரை வைக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு முன் புனித நீர் விளக்கு விநாயகருக்கு பிடித்த அவல், சுண்டல் அப்பம், பொரி, கொழுக்கட்டை, பழங்கள் மற்றும் பூக்கள் உள்ளிட்டவைகளை படைத்து வழிபட வேண்டும். இந்நாளில் நீங்கள் விரதம் இருந்தால் நாள் முழுவதும் விநாயகரை இன்னைக்கு வழிபடுங்கள் விநாயகர் கூறிய மந்திரத்தை சொல்லுங்கள், பாடல்களைப் பாடுங்கள். பிறகு மாலையில் விநாயகப் பெருமானுக்குரிய பூஜை செய்து விரதத்தை முடிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios