Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்திக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா? சுவாரஸ்யமான தகவல்கள்!!  

Vinayaka Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தி வரும்  செப்டம்பர் 7ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் மண்ணில் விநாயகர் திருவுருவத்தை  செய்து வழிபட்டால் மிகுந்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

vinayaka chaturthi 2024 here some interesting facts about vinayagar in tamil mks
Author
First Published Aug 30, 2024, 12:18 PM IST | Last Updated Aug 30, 2024, 12:18 PM IST

விநாயகர் அவதரித்த நாள் தான் விநாயகர் சதுர்த்தியாக (Ganesh Chaturthi) நாடு  முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுத்திக்கு பின்னால் பல சுவாரஸ்யங்கள் ஒளிந்துள்ளன. 51 வடிவ திருவுருவச் சிலைகளில் விநாயகரை நாம்  வழிபட்டு வருகிறோம். 

விநாயகர் பிறப்பு அதிசயம்: 

ஒரு முறை பிரம்மா கொட்டாவி விடும்போது  சிந்தூரனன் எனும் அரக்கன்  தோன்றியுள்ளான். அவனுடைய தேகம் அந்தி சாயும்போது சிவக்கும் வானம் போல சிவந்து இருந்திருக்கிறது. அந்த சிவப்பு நிறம் பிரம்மாவை அச்சப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகசிந்தூரனன் கேட்கும் முன்பே அவனுக்கு வரங்களை கொடுத்துள்ளார். 

எந்த கஷ்டமும் இன்றி வரம் கிடைத்த கொண்டாட்டத்தில் இருந்த அரக்கன், மமதை தலைக்கேறி மூவுலகையும் ஆட்டிப் படைத்தான்.  மும்மூர்த்திகள் என்ன செய்யவென்று தெரியாமல் திகைத்தனர். இந்த நேரத்தில், விநாயகர் தோன்றி,"பயப்பட  வேண்டாம். நானே உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன்”என சொல்லி  மறைந்தார். உமாதேவியார் கருத்தரித்தார். ஆனால் அரக்கன் சிந்தூரனன் உமாதேவியாரின் திருவயிற்றில், காற்று போல புகுந்து குழந்தையின் தலையை திருகி கையோடு எடுத்து சென்றுவிட்டான். இதன் பின்னர் தலை இல்லாமல் குழந்தை பிறந்தது. அதை பார்த்து அங்கிருந்தோர் பதறினார்கள். 

இதையும் படிங்க: எங்கெல்லாம் விநாயகர் சிலை வைக்கக் கூடாது.! தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் - என்னென்ன?

ஆனால் சிவபெருமான் சாந்தமாக இருந்தார். ஏற்கனவே கஜமுகாசுரன் தன்னிடம் கேட்டபடி,  அவனுடைய தலையைத் தனது குழந்தைக்கு பொருத்தினார். இப்படியாக, கஜானனன் விநாயகப் பெருமானாக அவதாரம் எடுத்தார். உமாதேவியார் அவரை சீராட்டி வளர்த்தார்.  உரிய காலம் வந்த பின் சிந்தூரனனை அழிக்கச் சென்றார். அதில் வெற்றி வாகை சூடினார்.

தன் துதிக்கையால் சிந்தூரனனை ஒரே தூக்காக தூக்கி ரத்தம் வருமளவுக்கு அடித்து அந்த ரத்தத்தை தனது உடலில் பூசிக் கொண்டார். அதனால் தான் "சிந்தூர விநாயகர்" என அவருக்கு பெயர் வந்தது. இதுவே பார்கவ புராணமாகும். 

இதையும் படிங்க:  விநாயகர் சதுர்த்தி 2024 : தேதி, நேரம் முக்கியத்துவம் மற்றும் பூஜை விதி..

விநாயகருக்கு யானை முகம் ஏன்? 

இந்து புராணங்களின்படி, ஒருமுறை பார்வதிதேவி நீராட போகும் சமயம், யாரும் உள்ளே பிரவேசிக்கக் கூடாது என விநாயகருக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்போது சிவபெருமானும் வெளியே சென்றிருக்கிறார்.  விநாயகர் தாய் சொல் தட்டாதவர். அந்த நேரத்தில் திரும்பி வந்த சிவபெருமானைக் கூட  உள்ளே விடவில்லை. இதனால் சிவனுக்கு கோபம் வந்தது. கோபத்தில் விநாயகரின் தலையை கொய்துவிட்டு உள்ளே போய்விட்டார். 

நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி தலை துண்டிக்கப்பட்டு கிடந்த விநாயகரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபத்தின் உச்சத்தில் இருந்த பார்வதி தேவியை சாந்தப்படுத்த சிவன் முடிவு செய்தார். வட திசையில் போய் முதலில் கண்ணில் படும் உயிரின் தலையைக் வெட்டி வருமாறு கட்டளையிட்டார். இந்த வார்த்தைகளுக்கு இணங்கிய கணங்கள் வடதிசையில் சென்றனர். முதலில் ஒரு யானையை தான் கண்டார்கள்.  சற்றும் யோசிக்கவில்லை, யானை தலையை வெட்டி கையோடு சிவனிடம் கொண்டு சென்றனர். 

சிவபெருமான் அந்த யானையின் தலையை விநாயகரின் உடலில் வைத்து உயிர் கொடுத்தார். தன் மகன் உயிர் பெற்றதைக் கண்டு தேவியார் சாந்தமடைந்தார். அவர் உள்ளம் களிகூர்ந்தது.  மகனை வாரி அணைத்துக் கொண்டார். அப்போது பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என சிவபெருமான் நாமம் சூட்டினார். 

தன்னுடைய கணங்களுக்கு தலைமையாகவும் விநாயகரை  நியமனம் செய்தார் என ‘நாரதபுராணத்தில்’ சொல்லப்பட்டுள்ளது.  இது தான் பிள்ளையார் அவதரித்த கதை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios