Asianet News TamilAsianet News Tamil

புதிய நாடாளுமன்ற வாஸ்து..! இந்தியாவோட நிலைமை இனி இதுதானாம்... பிரபல ஜோதிடரின் கணிப்பு

New parliament building vastu: புதிய நாடாளுமன்றம் வளர்ச்சியின் அடையாளம் எனவும், நாட்டில் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும் ஜோதிடர் ருத்கரணா பிரதாப் கூறியுள்ளார். 

vastu significance of the new parliament building
Author
First Published May 30, 2023, 1:50 PM IST

புதிய நாடாளுமன்றம் இந்திய கட்டிடக்கலை வளர்ச்சிக்கு துணையாக இருப்பதாக பல கட்டிடக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கட்டடம் 'ஸ்ரீ யந்திரத்தால்' ஈர்க்கப்பட்டது. இது பாரம்பரிய இந்து பூஜைகளில் பயன்படுத்தப்படுவதாகும். நல்ல ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது. கோனார்க் சூரியன் கோயிலின் தேர் சக்கரத்தின் பெரிய பித்தளை சிற்பம் கூட இந்த மாளிகையில் உள்ளது. இங்குள்ள மூன்று பொதுக் காட்சிக்கூடங்களில் ஒன்றான இசைக் காட்சியகம், இந்தியாவின் நடனம், பாடல் மற்றும் இசை மரபுகளைக் காட்சிப்படுத்துகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை இந்த சிற்பக் கூடம் காட்சிப்படுத்துகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஓவியங்கள், அலங்கார கலைகள், சுவர் பேனல்கள், கல் சிற்பங்கள், உலோக பொருட்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதிய கட்டிடத்தில் 6 நுழைவாயில்கள் உள்ளன. அதில் பாதுகாப்புக்குரிய விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய கலாச்சாரம், வாஸ்து சாஸ்திரம், ஞானம், வெற்றி, வலிமை ஆகிய பண்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் வழிகாட்டும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. 

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் நிலவரங்களை குறித்து துல்லியமாக கணித்து சொன்னவர் சண்டிகரை சேர்ந்த ஜோதிடர் ருத்கரணா பிரதாப். இவர் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வாஸ்து குறித்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"புதிய நாடாளுமன்றம் வளர்ச்சியின் அடையாளக் கட்டமைப்பு. வாஸ்து படி, இது ஒரு கௌமுகி அமைப்பு. இது இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றமான தருணமாக இருக்கும். இது நாட்டிற்கான வளர்ச்சி, முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

கௌமுகி கட்டமைப்பின் சிறப்பு

பசு அனைத்து தெய்வங்களின் இருப்பிடமாக நம்பப்படுகிறது. அதனால் அனைத்து தெய்வீக ஆன்மாக்களின் நேர்மறையான ஆற்றலும் பசுவிடம் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆகவே கௌமுகி அமைப்பில் உள்ள நாடாளுமன்றத்திலும் நேர்மறை ஆற்றல் நிலவும். வாஸ்து படி கௌமுகி அல்லது பசு முகத்தில் உள்ள அடுக்குகள் முன்பக்கத்தில் இருந்து குறுகியதாகவும், பின்புறம் அகலமாகவும் இருக்கும். ராஷ்டிரபதி பவன் மற்றும் இந்தியா கேட் இடையே இருக்கும் புதிய நாடாளுமன்றம் கௌமுகி அமைப்பில் உள்ளது. ஆகவே இது வளர்ந்து வரும் இந்தியாவின் அடையாள சின்னம். கௌமுகி அமைப்பு காரணமாக நாடாளுமன்ற கட்டடத்தின் உள்ளே நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக உள்ளது. கட்டடம் வாஸ்துவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios