இந்து மதத்தின் சில மரபுகளின்படி, சிலரின் கால்களில் விழுந்து ஆசி பெறுவது ஆசீர்வாதத்திற்கு பதில் பாவத்தைப் பெற்றுத் தரும்.
நம் நாட்டின் பாரம்பரியத்தில் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். இது பல்வேறு வளங்களை பெற்றுத் தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்து மதத்தின்படி, கால்களை தொடுவது மரியாதையின் வெளிப்பாடாகும். ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் 9 பேருடைய கால்களில் விழும்போது நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பதிலாக பாவங்களை பெற்றுக் கொள்வீர்கள். அவர்கள் யார்? ஏன் அவர்கள் காலில் விழக்கூடாது என்பதை இங்கு காணலாம்.
பல நூறு ஆண்டுகளாக, சனாதன கலாச்சாரத்தில் பெரியவர்களின் பாதங்களை தொடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே முதியவர்களின் கால்களைத் தொட பெற்றோர் சொல்லிக் கொடுக்கின்றனர். இருப்பினும் 'பகவத் கீதை' சிலரின் பாதங்களைத் தொடக்கூடாது என அறிவுறுத்துகிறது.
மாமனார் பாதங்களை தொடாதீங்க!
மருமகன் தன் மாமனாரின் பாதங்ககைத் தொட்டு ஆசி பெறக் கூடாது என வேதங்கள் சொல்கின்றன. மகாதேவன் தன்னுடைய மாமனார் தக்ஷனை வெட்டிய பின் இந்த விதி நடைமுறைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் தான் இந்த முறை நடைமுறையில் உள்ளது. பகவான் கிருஷ்ணர் தன்னுடைய மாமா கம்சனை மீட்ட பின், மருமகன் தன்னுடைய மாமாவின் பாதங்களை தொடாமல் இருப்பது பின்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கன்னிப் பெண்கள்
இந்து மதத்தில் கன்னிப் பெண்கள் துர்கா தேவியின் அம்சமாக கருதப்படுகிறார்கள். அவர்களின் பாதங்களைத் தொடக் கூடாது. மீறினால் பாவம் சேரும்.
இறுதி சடங்கு
ஒருவர் தகனம் நடந்த இடத்திற்கு சென்று திரும்பும்போது அவருடைய பாதங்களைத் தொடக்கூடாது. இது சரியான விஷயம் அல்ல. இறுதிச் சடங்கு சென்று வருபவர் தூய்மையற்றவர். குளித்த பின் அவர் பாதங்களை தொடலாம்.
பூஜை நேரம்
பூஜை செய்யும் நபரின் கால்களை தொடக் கூடாது. இது பாவத்திற்கு இட்டுச் செல்லும். பூஜை முடிந்த பின் அவர் கால்களைத் தொடலாம்.
துறவி
பகவத் கீதையின்படி துறவி தன்னுடைய குருவின் கால்களை மட்டும் தான் தொட்டு வணங்க வேண்டும்.
துரதிஷ்டம்
படுத்திருப்பவருடைய பாதங்களைத் தொடுவது தவறு. இதனால் துரதிர்ஷ்டம் வரும் என கருதப்படுகிறது. உறங்குபவரின் அல்லது ஓய்வெடுக்கும் நபரின் கால்களைத் தொட வேண்டாம். சனாதன கலாச்சாரத்தின்படி, இறந்தவரின் பாதங்களை மட்டுமே அவர் படுத்திருக்கும் போது தொட வேண்டும்.
கோயில் விதி
கோயிலில் கடவுளே உயர்ந்தவர். அங்கு மனிதர்களின் கால்களைத் தொடுவது விதிகளுக்கு எதிரானது. இது அவமதிப்பாகக் கருதப்படுகிறது. கோயிலுக்கு வெளியில் அந்த நபரின் பாதங்களைத் தொடலாம்.
தூய்மை முக்கியம்
ஒருவர் அசுத்தமாக இருக்கும்போது அவருடைய கால்களில் விழக் கூடாது. குளிக்காமல் அல்லது எதன் காரணமாக அழுக்காக இருந்தாலும் தூய்மையற்றவராக இருப்பவரின் பாதங்களைத் தொடக்கூடாது.
