இன்று பங்குனி கிருத்திகை.. இரவுக்குள் இந்த 1 காரியத்தை செய்தால்.. முருகபெருமான் அருளை பெறலாம்..!
panguni kiruthigai: பங்குனி கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது ரொம்ப சிறப்பு வாய்ந்தது.
திருவாதிரை நட்சத்திரம் என்றால் சிவனுக்கு உகந்தது. ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரையில் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நல்லதே நடக்கும். அப்படி, கார்த்திகை நட்சத்திரம் என்றால் முருகபெருமானுக்கு ஏற்ற நாள். அதுமட்டுமில்லை, வைகாசி விசாகம், பங்குனியின் உத்திரம், தையின் பூச நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்ய ஏற்ற நாள்களாகும். நம் வாழ்வில் இருக்கும் எதிர்ப்புகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும் அருள் முருகப்பெருமானுக்கு உண்டு.
மாதம்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு ஏற்ற நாள். இந்த நாளில் பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்காதவர்கள் கூட வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, செவ்வரளி மலர்களால் தொடுத்த மாலை சார்த்தி முருகனை மனதார வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். கடன் தொல்லைகள் விலகும் சிலருக்கு புது வீட்டு மனை வாங்கும் யோகம் கிடைக்கலாம்.
இதையும் படிங்க: தினமும் இந்த 7 காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சீராகும் நோய்கள்... ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கேரண்டி..!
முருகப் பெருமானை கந்தா! கந்தகுரு எனவும், ஞானவேல்!! ஞானகுரு எனவும் ஞானக்குமரன் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். ஞானகுருவாகத்தான் சுவாமிமலை, திருச்செந்தூரிலும் வீற்றிருக்கிறார் முருகப்பெருமான். முருகன் வீற்றிருக்கும் கோயிலில் இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாளை முன்னிட்டு பலர் விரதம் இருந்து மாலை வேளையில், முருகனை தரிசிப்பார்கள். நீங்களும் செவ்வரளி மாலை சார்த்தி முருகனை இன்று வழிபட்டு அருள் பெறுங்கள்.
இதையும் படிங்க: இறைவனுக்கு விரதம் இருக்கும்போது பூண்டு, வெங்காயம் சாப்பிடக் கூடாது.. இது அறிவியல் உண்மை தெரியுமா?