இறைவனுக்கு விரதம் இருக்கும்போது பூண்டு, வெங்காயம் சாப்பிடக் கூடாது.. இது அறிவியல் உண்மை தெரியுமா?
விரத காலத்தில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல், ஆன்மீக காரணங்கள் குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
இறைவனின் அருளை பெற சிலர் குறிப்பிட்ட நாள்களில் விரதம் இருப்பார்கள். விருப்பங்களை விடுத்து, ஆசைகளை துறந்து இறைவனிடம் பிடிவாதமாக அவர் அருளை பெற உண்ணாமல் இருக்கும் வைராக்கியம் தான் விரதம். தங்களுக்கு வேண்டியதை நிறைவேறக் கேட்டு பிரார்த்தனை செய்து சிலர் விரதம் கடைபிடிப்பர்.
விரத காலங்களில் சிலர் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பார்கள். சிலர் ஒருவேளை உண்பார்கள். சிலர் உணவே எடுத்து கொள்ளாமல் தங்களை வருத்தி விரதம் இருப்பார்கள். இதனிடையே விரத காலங்களில் பூண்டு, வெங்காயத்தை தவிர்க்க வேண்டும் என பெரியோரும் சொல்வார்கள். இந்த கட்டுப்பாட்டிற்கு ஆன்மீகம், அறிவியல் ரீதியாக காரணங்கள் இருக்கின்றன.
வழிபாட்டில் இடையூறு
உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருக்கும்போது, உடல் எப்போதும் போல இயங்கும். இதனால் சிறுநீர், மலம் கழிப்பது மாதிரியான இயற்கை உபாதைகள் விரதத்தின் இடையே தொந்தரவு செய்யும். இதனால் வழிபாட்டில் தடை வரும். நம் சிந்தனைகளும் கூட அலைபாய்ந்து இறைவனிடமிருந்து விலகிவிடும். ஆனால் உணவு உண்ணாமல் உபவாசம் இருந்தால் தண்ணீர் தான் குடிப்போம். பிற உணவுகள் எடுக்கமாட்டோம். இதனால் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் இயல்பான செயல்களில் மட்டும் ஆர்வம் காட்டும்; நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் சுத்திகரிக்கப்படும்.
பூண்டு வெங்காயம்..!
விரதம் இருப்பவர்கள் அசைவ உணவுகள், வெங்காயம், பூண்டு ஆகியவை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது என சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால், நாம் உண்ணும் உணவிற்கு ஏற்ற மாதிரி தான் நம்முடைய உணர்வுகளும் இருக்கும். பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும்போது சாத்வீக குணம் அதிகமாகும். கார சாரமான மசாலா, புளி, காரம் ஆகியவை சாப்பாட்டில் எடுத்து கொண்டால் ராஜத குணம் ஏற்படுமாம். இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு தாமச குணம் வருமாம்.
அறிவியல் காரணம்..
பூஜை விரதம் உள்ளிட்ட வழிபாடுகளின்போது சாத்வீக உணவு தான் அதிகமாக எடுக்க வேண்டும் என சொல்வதற்கு, நம் உணர்வுகளை அலைபாயவிடாமல் ஒரு நிலையாக வைக்கத்தான். ஏனெனில் சாத்வீக உணவுகளால் தான் மனம் அமைதியாக இருக்குமாம். பூண்டு, வெங்காயம் ஆகியவை லெளகீக உணர்வுகளை தூண்டும் குணம் கொண்டவை. இதன் காரணமாகவே துறவு வாழ்க்கையில் இருப்பவர்கள் கடவுள் சிந்தனை மேலோங்க பூண்டு வெங்காயம் சேர்த்து கொள்வதில்லை.
இதையும் படிங்க: குலதெய்வம் கோயிலுக்கு இந்த 1 தானம் செய்தால்... எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீருமாம்..!
வெறும் உடலால் அல்லாமல் மனதாலும் கடவுளுக்கு அருகே தன்னை வைத்து கொள்ள லெளகீக உணர்வை கிளறி விடும் வெங்காயம், பூண்டு ஆகிய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். விரத காலத்தில் பூண்டையோ, வெங்காயத்தையோ சாப்பிட வேண்டாம் என சொல்வதற்கு காரணம் இவ்வளவு தான்.
இதையும் படிங்க: தினமும் இந்த 7 காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சீராகும் நோய்கள்... ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கேரண்டி..!