திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண மாரியம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற பால்குட திருவிழா..

திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண மாரியம்மன் ஆலய முதலாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது

Palkuda festival held in Sri Kalyana Mariamman Temple, Thirumanancheri.

மயிலாடுதுறை மாவட்டம்  திருமணஞ்சேரி கிராமம் கீழத்தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கல்யாண மாரியம்மன் ஆலயம் முதலாம் ஆண்டு பால்குட  திருவிழா நடைபெற்றது. முன்னதாக விக்ரமன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களுடன் அழகு காவடி,அலங்கார காவடிகள் பம்பை மேளம்,மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு108 பால்குட அபிஷேக ஆராதனையும் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் நாட்டாமைகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகளிர் சுய உதவி குழுக்கள் கீழத்தெரு வாசிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதே போல் மயிலாடுதுறை நகரில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியான நேற்று, பால்குட விழா நடந்தது. முன்னதாக காவிரி துலாக்கட்டத்தில் இருந்து ஏராளமான பழ வியாபாரிகள் பால்குடம் எடுத்து, பச்சைக்காளி, பவளக்காளி, சிவதாண்டவ நடனத்துடன் மேள தாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக புறப்பட்டனர். அதன்பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடி கடைசி வெள்ளி.. பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு அபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios