ஆடி கடைசி வெள்ளி.. பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு அபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் தீபாராதனை திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்

Aadi last friday.. special abhishekam in famous temples.. large number of devotees darshan

ஆன்மீக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மாதங்களில் ஆடி மாதமும் ஒன்று. அந்த ஆடி மாதப்பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை என ஆடி மாதத்தில் வரும் பல்வேறு சிறப்பு நாட்கள் உள்ளன. அந்த வகையில் ஆடி கடைசி வெள்ளியான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டடு.

அதன்படி, வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் தீபாராதனை திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.  வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து சிறப்பு அலங்காரங்களாக சந்தனகாப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு சாமிதரிசனம் செய்தனர். 

அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம் வெகு நடைபெற்றது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவம் முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து   சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். மங்கள வாத்தியங்களுடன் சுவாமி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

சிவன் கோயிலுக்கு சென்று இதை செய்தால் போதும்.. தீராத நோய்கள் கூட குணமாகும்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios