நவம்பர் அமாவாசை எப்போது? தீபாவளி அன்று அசைவம் சாப்பிடலாமா? கூடாதா?

தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே அமாவாசை நாளில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

November Amavasai 2023 : should we eat non-veg on Diwali or not? Rya

இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே பெரும்பாலான தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை வரும். சில ஆண்டுகளில் அமாவாசை நாளன்று தீபாவளி பண்டிகை வரும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று மதியம், அதாவது நவம்பர் 12-ம் தேதி பிற்பகல் 2.44 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. அடுத்தல் நவம்பர் 13-ம் தேதி 2.56 மணிக்கு முடிவடைகிறது. எனவே தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே அமாவாசை நாளில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்?

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, விரதம் மேற்கொள்வது நமது குடும்பத்திற்கு நன்மை பயக்கும். மேலும் தீபாவளி அல்லது தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களின் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்கு மற்றும் சாங்கியங்களை செய்வது நல்லது. மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் முன்னோர்களின் படங்களை அலங்கரித்து பிரார்த்தனை செய்வது நல்லது. மேலும் தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் அமாவாசை நாளில் முடிந்தால் அருகில் உள்ள ஏழை எளியோருக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பது, உணவளிப்பது என தான தர்மங்களை செய்யலாம். இதனால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

துளசி செடிக்கு அருகில் இந்த பொருட்களை வைக்காதீங்க.. வீட்டில் எதிர்மறை ஆற்றல், வறுமை அதிகரிக்குமாம்..

என்ன செய்யக்கூடாது?

தீபாவளி அன்று அமாவாசை வந்தால் அசைவம் சாப்பிடக்கூடாது. ஆனால் தீபாவளி நாளில் அசைவம் சாப்பிட்டால் கணக்கில்லை என்று கூறி சிலர் அசைவம் சாப்பிடுகின்றனர். ஆனால் அப்படி செய்யக்கூடாது. அமாவாசை எப்போது வந்தாலும், வீட்டை சுத்தம் செய்து, குளித்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும். கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது. அதே போல் வீட்டில் கோலமிடுதலும் கூடாது. அமாவாசைக்கு மறுநாள் அல்லது முதல் நாள் அசைவம் சாப்பிட்டால் தவறில்லை.

இந்த ஆண்டு அமாவாசை திதி, தீபாவளி அன்று மதியம் தொடங்கி அடுத்த நாள் முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் அசைவம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அப்படி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் அமாவாசை திதி தொடங்கும் முன்பே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios