Asianet News TamilAsianet News Tamil

துளசி செடிக்கு அருகில் இந்த பொருட்களை வைக்காதீங்க.. வீட்டில் எதிர்மறை ஆற்றல், வறுமை அதிகரிக்குமாம்..

துளசி செடிக்கு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Do not keep these items near Tulsi plant.. negative energy in the house, poverty will increase.. Rya
Author
First Published Nov 8, 2023, 8:43 AM IST | Last Updated Nov 8, 2023, 8:43 AM IST

இந்து கலாச்சாரத்தில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டின் முற்றத்தில் துளசி செடியை வைப்பதால் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. துளசியை வழிபடுவதால் வழிபாட்டை விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை மகிழ்விக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன..

இருப்பினும், துளசியுடன் தொடர்புடைய குறிப்பிட்ட விதிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, புனிதமான துளசி செடிக்கு அருகில் சில பொருட்களை கண்டிப்பாக வைக்கவே கூடாது. ஏனெனில் அவை ஒருவரின் வாழ்க்கையில் இடையூறு விளைவிக்கும் என்றும் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. எனவே துளசி செடிக்கு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காலணிகள்

முதலாவதாக, துளசிக்கு அருகாமையில் எந்த விதமான ஷூ, காலணிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். புதிய செருப்பாக இருந்தாலும் துளசி இருக்குமிடத்தில் அதை வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வது அன்னை துளசியை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது, மேலும் வீட்டில் தரித்திரத்தை கொண்டு வரும் என்றும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் இழக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

சிவலிங்கம்

துளசி பானைக்குள் சிவலிங்கத்தை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கை துளசியின் கடந்தகால அவதாரமான பிருந்தா, ஜலந்தர் என்ற அரக்கனின் மனைவியாக இருந்தார். அவர், இறுதியில் சிவபெருமானால் தோற்கடிக்கப்பட்டது என்ற புராணங்கள் கூறுகின்றன. எனவே சிவபெருமானை துளசி செடியிலிருந்து தனித்தனியாக வைத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது, 

முட்செடிகள்

துளசிக்கு அருகில் முட்செடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முட் செடிகளை வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை சீர்குலைக்கும். இந்த ஏற்றத்தாழ்வு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க பங்களிக்கும், இது வாழ்க்கையை மிகவும் சவாலாகவும் அசௌகரியமாகவும் மாற்றும்.

தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டம்.. செல்வ செழிப்பு அதிகரிக்குமாம்..

துடைப்பம்

மேலும், துளசியின் அருகாமையில் துடைப்பம் வைப்பதைத் தவிர்த்து அதன் புனிதத்தை நிலைநாட்டுவது அவசியம். சுத்தம் செய்யும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் துடைப்பம், துளசியின் புனிதத்தன்மைக்கு முரணானது. எனவே துளசி செடி அருகே துடைப்பத்தை வைப்பதால் குடும்பத்தில் நிதிச் சிக்கல்கள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படலாம். மேலும் மாலையில் வீட்டை பெருக்குவது லட்சுமி தேவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

குப்பை தொட்டி

துளசியைச் சுற்றியுள்ள தூய்மை மிக முக்கியமானது. அதன் அருகே குப்பைத் தொட்டிகளை  வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது லட்சுமியின் கோபத்திற்கு ஆளாவதோடு, விஷ்ணுவின் அதிருப்தியையும் தூண்டும். இந்த விதியை புறக்கணிப்பவர்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios