தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டம்.. செல்வ செழிப்பு அதிகரிக்குமாம்..
வாஸ்து சாஸ்திரத்தின்படி தீபாவளி நாளில் சில விலங்குகள் அல்லது பறவைகள் பார்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவதை குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது..
வாஸ்து சாஸ்திரத்தில் சில பூச்சிகள் மற்றும் விலங்குகளைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாதாரண நாட்களில் அவற்றைக் கண்டறிவது பொதுவானதாக இருக்கலாம்; ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி தீபாவளி நாளில் சில விலங்குகள் அல்லது பறவைகள் பார்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவதை குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது..
Diwali 2023
இதில் பல்லிகள், கருப்பு எறும்புகள் மற்றும் பூனைகள் அடங்கும். தீபாவளியன்று மாலையில் அனைத்து கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும் என்று வீட்டின் பெரியவர்கள் அடிக்கடி அறிவுறுத்துவதற்கும் இதுவே காரணம். தீபாவளியன்று வீட்டிற்குள் வரும் பல்லி, கருப்பு எறும்பு, பூனை, ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஜோதிட நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.
மூஞ்சூறு: தீபாவளி நாளில் மூஞ்சூறுகளை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. செல்வத்தின் கடவுளான குபேர், மூஞ்சூறுகளை கண்டு மகிழ்ச்சியடைந்து, செல்வத்தை அள்ளி அள்ளி கொடுப்பாராம். எனவே தீபாவளி நாளில். மூஞ்சூறுகளை பார்ப்பது நல்ல சகுனமாகும். இதன் மூலம் வாழ்க்கையின் தொல்லைகள் மற்றும் தடைகளும் விலகத் தொடங்குகின்றன.
பூனை: வீட்டில் பூனையின் வருகையும் நிதி ஆதாயத்தின் அறிகுறியாகக் கூறப்படுகிறது. எனவே, தீபாவளியன்று இரவில் பூனையைப் பார்ப்பது, லட்சுமி தேவியின் வருகையையும், வரும் நாட்களில் செல்வச் செழிப்பு அடைவதையும் குறிக்கிறது.
பல்லி: பல்லிகள் ஒரு அச்சுறுத்தல் என்று மக்கள் கூறினாலும், தீபாவளியன்று பல்லியைக் கண்டால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வழிபாட்டின் வீட்டைச் சுற்றி பல்லி இருந்தால், அது அதிர்ஷ்டத்தைத் தரும். இது எதிர்காலத்தில் பணம் பெறுவதற்கான அறிகுறியாகும். தீபாவளியன்று இரவில் வீட்டில் பல்லியைக் கண்டால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி உங்களை ஆசீர்வதிக்கப் போகிறாளர் என்பது நம்பிக்கை.
Diwali 2023 dos and donts
கருப்பு எறும்பு: தீபாவளி நாளில் வீட்டில் கருப்பு எறும்புகளைப் பார்ப்பதும் மிகவும் சாதகமான அறிகுறியாகும். வீட்டில் தங்கப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து கருப்பு எறும்புகள் வெளிப்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. செல்வம் பெருகும் என்பதை இது குறிக்கிறது. அதே நேரத்தில், எறும்புகள் கூரையிலிருந்து வெளியே வந்தால், விரைவில் சொத்துகள் வந்து சேரும். மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்..
diwali 2023 kab hai
ஆந்தை: தீபாவளியன்று இரவில் ஆந்தையைக் கண்டால், லட்சுமி தேவியே உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்று அர்த்தம். அறிவு, நல்ல அதிர்ஷ்டம், செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் ஆகியவற்றை லட்சுமி தேவி குறிக்கிறார் என்று நம்பப்படுகிறது. தீபாவளியன்று ஆந்தையைப் பார்ப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமை, சண்டை, சச்சரவுகள், துரதிர்ஷ்டம் ஆகியவை நீங்கி மகிழ்ச்சியும் செல்வ வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.