கோவை கோனியம்மன் கோவில் மாசித் தேரோட்டம்; போக்குவரத்தில் மாற்றம்

கோவை சோனியம்மன் கோவில் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

koniamman car festival thousands of devotees participate

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் திருக்கோவில் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு மாசித் தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஜனவரி 23ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து பிப்ரவரி 14ம் தேதி பூச்சாட்டு நிகழ்வும், பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டும் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு மற்றும் வெள்ளை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பிப்ரவரி 28ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாசித் தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான தோ் வடம்பிடித்தல் நிகழ்வு இன்று பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறுகிறது. தோ் நிலையில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளை கடந்து மீண்டும் திருத்தோ் தோ்நிலையை அடைகிறது. இந்த தேர்  இழுக்கும்  விழாவில் கோவையின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.

மனம் திருந்திய கஞ்சா குற்றவாளிக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்த கோவை காவல் துறையினர்

இதனால் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதிலும் காவல் துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய காட்டு யானை; வெளியான அதிர்ச்சி வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios