பக்தனின் கனவில் காலணி கேட்கும் தான் தோன்றி மலை பெருமாள்!
கரூர் தான் தோன்றி மலை பெருமாள்.. இவர் கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான் தோன்றி மலையில் அருள் பாலிக்கிறார். அருள் மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருப்பதிக்கு சென்ற தரிசனம் செய்ய முடியாதவர்களும் வயதானவர்களும் இந்த பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் சிறப்பு. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்னும் பக்தன் மிகவும் மனம் வருந்திக்கிடக்க அப்போது திருப்பதி ஸ்ரீநிவாஸ பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதிகம். இக்கோயில் தான் தான் தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் இத்திருக்கோயில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவ திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் திருத்தேரோட்டம் நேற்று நடந்தது.
புரட்டாசி பெருவிழாவில் பக்தர்கள் வேண்டுதலாக பல்வேறு பொருள்களை காணிக்கை செலுத்துகின்றனர். திண்டுக்கல் அருகே சின்னதம்பிபட்டியில் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலணி தைக்கும் தொழிலில் உள்ளனர். அவர்களின் முன்னோர்கள் பெருமாளுக்கு காலணி செய்து காணிக்கை செலுத்துவது வழக்கம். அதிலும் பெருமாளே இவர்களது கனவில் வந்து தேவையான அளவு காலணி வேண்டும் என்று கேட்பதாகவும் அதை காணிக்கை செலுத்துவதாகவும் பாரம்பரியமாக நடந்து வருகிறது.
யாராச்சும் சாபம் விட்டால் பலிச்சிடுமா? யார் சாபம் பலிக்கும்!
வழக்கம் போல இந்த ஆண்டு அருண்குமார் என்பவரின் கனவில் தோன்றிய இறைவன் 3 அடி நீளம், 2 அடி உயரம் அளவில் பெரிய காலணி செலுத்துமாறு கேட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த காலணியை தயார் செய்த அவர்கள், அவர்களது கோவிலில் இரண்டு தினங்கள் வைத்து பூஜை செய்து, அங்கிருந்து வீட்டுக்கு ஒருவர் மேளதாளங்களுடன் ஊர் ஊராக சென்று கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு காணிக்கை செலுத்தினர்கள். முன்னோர்கள் வழிபடி கனவில் வந்ததை காணிக்கை செலுத்தினால் எங்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதிகம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது .. ஏன் புதனுக்கு அவ்வளவு முக்கியத்துவம்!
இந்த கோவிலிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர். திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைப்பது வழக்கம். இது ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறுகிறது.