யாராச்சும் சாபம் விட்டால் பலிச்சிடுமா? யார் சாபம் பலிக்கும்!
நீ நல்லாவே இருக்க மாட்டே.. வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம். அப்படி சொல்லும் வார்த்தைகள் அதாவது சாபமானது பலித்துவிடுமா என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் மனம் நொந்துபோனவர்கள் தங்கள் மனதை நோகசெய்தவர்களின் கண்களை நேராக பார்த்து சபித்தால் அவை பலித்துவிடும். அதிலும் தண்டிக்க முடியாத அளவு தவறை செய்திருந்தால் நிச்சயம் அந்த பாவத்துக்கு ஆளாவார்கள்.
முனிவர்கள், ரிஷிகள், யோகிகள் சொல்வது மட்டுமல்ல இப்படி தவறே செய்யாமல் தண்டனையை எதிர்கொள்பவர்கள் காரணகர்த்தாவை பார்த்து நொந்து சபிக்கும் போது அது நிச்சயம் பலிக்கவே செய்துவிடும். அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை என்றா தெய்வப்புலவர். அதனால் சாபத்துக்கு வலிமை உண்டு.
கண்முன்னே குபேரனாய் வாழ்ந்த ஒருவன் கண நேரத்தில் குப்பைமேட்டுக்கு போகும் போது யார் விட்ட சாபமோ என்று சொல்வதும். உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவம் வேண்டாம் என்று சொல்வதும் இதனால் தான். சாவை விட கொடிது சாபம் என்று சொல்லும் அளவுக்கு ஆழமான வலியை அளிக்கும் சாபம்.
வீட்டில் எதிர்மறை சக்தி எப்படி மோசமான நிலையை உண்டு செய்யுமோ எப்படி நேர்மறை சக்தி வளமான ஆற்றலை அளிக்குமோ அதே போன்று தான் இதுவும். வீட்டிலும் உறவிலும் நட்பிலும் மனம் நோகும் செயலை செய்தாலோ மனதளவில் துன்பத்தை கொடுத்தாலோ திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் இயலாத நிலையில் கண்களில் கண்ணீர் பெருக வார்த்தைகள் வராமல் தவிப்பார்கள். இத்தகைய துன்பம் உனக்குள் வராமல் போய்விடுமா என்ன என்று பார்ப்பார்கள். இத்தகைய கொடூரம செய்த உனக்கு நல்ல மரணம் உண்டாகிவிடுமா என்றெல்லாம் மனதுக்குள் மருகுவார்கள். ஆனால் இத்தகைய சாபத்தை எல்லா நேரங்களிலும் விடக்கூடாது என்றாலும் அவர்களை இத்தகைய நிலையில் நிறுத்தி இருப்பவர்கள் இன்னும் மோசமான நிலையை எதிர்கொள்வார்கள்.
நவராத்திரி இப்படித்தான் உருவானதாம்.. தெரிஞ்சுக்கங்க!
தியானம் செய்யும் போது எப்படி இறைவனை மட்டும் தியானிக்கிறோமோ அதே தீரத்துடன் தான் நமக்கு ஒருவர் செய்த துரோகத்தை நினைக்கும் போது மனமும் எண்ணமும் அதைப்பற்றிய சிந்தனையில் அதை நினைத்து ஒரு சக்தியை உண்டு செய்துவிடுகிறது.
அதனால் அவர்களை பார்க்கும் போது சாபம் வீறு கொண்டு எழுகிறது.
துன்பம் வரும் வேளையில் இந்த மந்திரம் சொல்லுங்கள்.. துணிச்சல் பிறக்கும்!
அதிலும் சாபம் என்பது ஒன்று மட்டுமல்ல பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம் விருட்ச சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என பல சாபங்கள் உண்டு.
எத்தகைய சாபத்தை பெற்றிருந்தாலும் அறிந்து அறியாமல் செய்தாலும் பரிகாரம் என்றால் அது குலதெய்வ வழிபாடும் சிவன் வழிபாடும் தான். குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து மனதார இனி தவறு செய்யமாட்டேன் என்று வழிபடுங்கள். அதன்படி நடங்கள் ஏனெனில் எத்தகைய சாபத்தையும் போக்கும் சக்தி குலதெய்வத்துக்கு உண்டு. நீங்கள் நல்லவராகவே இருந்தாலும் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து ஒருவர் செய்யும் தவறுக்கு துணை நின்றால் அத்தகைய சாபம் உங்களையும் தாக்கவே செய்யும். ஆதலால் பாவத்துக்கு பழி சொல்லுக்கும் ஆளாகாதீர்கள்.