நவராத்திரி இப்படித்தான் உருவானதாம்.. தெரிஞ்சுக்கங்க!
நவராத்திரி பூஜை எப்படி வந்தது அதன் வரலாறு பூஜை எப்போது தொடங்க வேண்டும். என்பதை வருடந்தோறும் படித்துவந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு புது உத்வேகம் இருக்கவே செய்கிறது.
நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அம்மாளை நினைத்து காலை, மாலை பூஜை செய்யபடுகிறது. இந்த ஒன்பது நாட்களும் மூன்று மூன்று நாட்களாக பிரித்து வணங்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் துர்க்கைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.
அடுத்து 3 நாட்கள் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி ஆகியோருக்கு பூஜைகள் நடக்கும்.
இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்ற பெயர்களில் அம்பிகைக்கு பூஜை செய்து சரஸ்வதி பூஜைகளுடன் நவராத்திரி நிறைவு பெறுகிறது. இப்படி அம்பாளை நாம் அம்பாளை வழிபட என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் வரமுனி என்ற பெயர் கொண்ட சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு தன்னைவிட யாரும் வல்லவன் இல்லை என்ற தற்பெருமை. தனக்கு நிகர் தானேதான் என்ற கர்வத்துடன் இருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில் தலைக்கனம் உச்சத்துக்கு போன வரமுனி எருமை உருவம் கொண்டு அகத்தியர் முனிவர் இருக்கும் இடத்திற்கு சென்று அட்டகாசம் செய்து அவமரியாதையாக நடந்து கொண்டார். வரமுனி செய்கையால் கோபம் கொண்ட அகத்தியர் மற்ற முனிவர்கள் அனைவரும் சேர்ந்து வரமுனிக்கு எருமையாக போவாய் என்று சாபமிட்டார்.
நவராத்திரி ஸ்பெஷல் - அம்மன் அருள்பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்!!
ரம்பன் என்ற அசுரன் அக்னி பகவானை நினைத்து கடும் தவம் புரிந்து வந்தான். அவனுது தவத்தை கடுண்டு மழிந்த அக்னி தேவன் அவன் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் எனக்கேட்டார். அதற்கு அவன் எனக்கு மிகப் பலசாலியான சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என கேட்டான். வேண்டிய வரத்தை அளித்த அக்னி தேவன் நீ எந்த பெண் மீது ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என அருள் புரிந்து மறைந்தார். இதக் கேட்டு உச்சாகத்துடன் காட்டுக்குள் நடந்து வந்து கொண்டிருந்தான் ரம்பன்.
நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம்!
முனிவர்களால் காட்டெருமையாக சபிக்கப்பட்ட வரமுனியை கண்டு காதல் கொண்டான். ரம்பனும் எருமையாக உருவெடுத்து இணைந்து அசுரன் மகிஷாசுரனை மகனாக பெற்றான்.மகிஷாசுரன் பத்து ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தான். மனமகிழ்ந்து பிரமன் தோன்றி வேண்டிய வரதை கேள் என்றார். எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. ஒரு கன்னிப்பெண்ணால்தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை கொடுத்து மறைந்தார் பிரம்மன்.
மகிஷாசுரனின் அட்டகாசம் அதிகரிக்க மகாவிஷ்ணுவை சரணடைந்தனர் தேவர்கள். தேவர்கள் யாராலும் இந்த அசுரனை தோற்க்கடிக்க முடியாது. ஒரு பெண்ணால் மட்டுமே தான் அவனை சம்ஹாரம் செய்ய முடியும். அது மகாசத்தியால் தான் முடியும் என்றார் மகாவிஷ்ணு. மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி வேண்டிக் கொண்டார்கள் ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் அம்பிகை தோன்றினாள். தங்களை காக்க வந்த தேவிக்கு சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தியை கொடுத்தார். வாயு பகவான் வில்லும்,அம்பறாத்துணியும் வழங்கினார். தேவி மகிஷனை சம்ஹாரம் செய்ய ஆவேசத்துடன் புறப்பட்டாள்.
மகிஷாசுரனுக்கும் அம்பிக்கைக்கும் கடும் போர் நடந்து முடிவுக்கு வந்தது இறுதியில் அழிந்தான் மகிஷாசுரன். அம்பாள் மகிஷாசுரனை அழித்தது அஷ்டமி தினத்தில் தேவர்கள் அம்பாளை வணங்கி வழிபடுவது அடுத்த நாளான நவமி தினம். அம்பாள் இருப்பிடம் சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி ஆகவே இந்த நாட்கள் தான் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் ஆகும். இப்படித்தான் நவராத்திரி வந்ததாக புராணம் கூறுகிறது.
அதே போன்று அம்மன் மகிஷாசுரனை வதம் செய்ய 9 நாள் கொலுவிலிருந்து 10 ஆம் நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய மகிஷாசுர மர்த்தினியானாள் என்ற கதையும் சொல்லப்படுகிறது. இப்போது தெரிந்துகொண்டீர்களா நவராத்திரி உருவான கதையை...