பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது .. ஏன் புதனுக்கு அவ்வளவு முக்கியத்துவம்!
பொன் கிடைக்கலாம். ஆனால் புதன் கிடைக்குமா என்று முன்னோர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த பழமொழிக்கு நாமே இட்டுக்கட்டி ஒன்றை சொல்கிறோம். பொன் என்பது இங்கு ஆடம்பர அணிகலனை குறிக்கவில்லை. பொன் என்பது பொன்னன் ஆகும். அதாவது குரு.. ஜூபிட்டர். குரு கிரகமான இதன் பொன்னிறத்தால் இதை பொன் என்று சொல்கிறோம்.
வியாழன் கிரகம் என்பது மிகப்பெரியது. சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ளது. இந்த பொன்னன் என்பது முன்னிரவிலும் சில் மாதங்களில் பின்னிரவிலும் நமது கணகளுக்கு பிரகாசத்தோடு தெரியும்.
இதில் புதன் கிரகம் என்பது மிகவும் சிறியது. சூரியனுக்கு அருகில் இருந்தாலும் இதை பார்ப்பது மிக அரிதானது. சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு அல்லது பின்பு உதயமாகும். புதன் சூரியன் அஸ்தமிக்கும் போதும் சற்று முன்பு அல்லது பின்பு அஸ்தமிக்கிறது. அதனால் சூரிய ஒளியில் பிரகாசம் குன்றி மங்கலாக தெரியும். அதனால் தான் பொன்னன் வியாழன் கிரகம்.. பொன் கிடைத்தாலும் புதன் கிடைககது என்று சொல்வார்கள்.
ஏனெனில் புதன் கிடைப்பதும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களும் சாதாரணமானதல்ல. நவக்கிரகங்களில் விவேகமும் பண்பும் நிறைந்தவர் புதன் தான். நமது ஜோதிச சாஸ்திரத்திலும் புத்திகாரனாக அழைக்கப்படுவது புதன் கிரஹத்தை குறிப்பிடுவார்கள். மேலும் புதனை வித்யாகாரகன் என்றும் கல்விக்குரியவனாகவும் புதனை சொல்வார்கள். இது ஜாதகத்தில் கல்வியறிவு மட்டும் தருவதில்லை. படிப்பறிவு மட்டும் தருவதில்லை. நுட்பமான அறிவு, அபரிமிதமான ஞானத்தை அளிக்கும் வகையில் இவர் இருக்கிறார்.
நவராத்திரி இப்படித்தான் உருவானதாம்.. தெரிஞ்சுக்கங்க!
பொன் என்னும் செல்வத்தை தேடலாம். ஆனால் புதனின் அறிவுசெல்வம் எத்தகைய செல்வம் கொடுத்தாலும் கிட்டிவிடாது. ஒருவன் இருக்கும் துறையில் புகழ் பெற்று கொடிகட்டி பிறக்க காரணம் அவன் ஜாதகத்தில் புதனின் அருள் ஓங்கி இருப்பது தான். புதனின் அருள் இல்லாத நிலையில் அவன் தகுதியானவனாக இருந்தாலும் திறமையானவனாக இருந்தாலும் அவன் உழைப்பு வீணாகவே இருக்கும். அதனால் தான் திறமை இருந்தும் முன்னுக்கு வரமுடியவில்லை என்று சொல்வார்கள்.
மேலும் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் போகும். சிறந்த மனிதனுக்கு தேவையான அறிவு, பண்புகள் ஓங்கும். செல்வம் பெருகும். செல்லும் இடமெல்லாம் சிறப்பார்கள். அதுவே புதன் வலுவிழக்கும் போது அவர்கள் புத்தியும் வலுவிழக்கும். மந்தநிலையை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அரச மரத்தை சுத்தினா தோஷம் போகுமா ?
ஒருவர் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் அவருக்கு இயற்கையில் விளைந்த பொருள்களை படைக்கலாம். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி பிரசாதம் வாங்கி சாப்பிட வேண்டும். புதனுக்குரிய மூலமந்திரத்தையும் ஸ்லோகத்தையும் சொல்லலாம்.
இவையெல்லாம் புதனின் அருளை உங்களுக்கு பெற்றுத்தரும்.
இதுதான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கான அர்த்தம்.