Asianet News TamilAsianet News Tamil

இந்த திசையில் மயிலிறகை வைத்தால் போதும்.. வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகிவிடும்..

வீட்டில் வைக்கப்படும் மயிலிறகு எப்போதும் எதிர்மறை விளைவுகளை நீக்க உதவுகிறது நேர்மறை ஆற்றலை தன்னை நோக்கி ஈர்க்கிறது.

Just put the peacock in this direction.. all the problems of the house will be removed..
Author
First Published Jul 5, 2023, 8:02 AM IST

ஒரு வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்புக்கு வாஸ்து சாஸ்திரம் முக்கியமானது. ஒருவேளை வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் குடும்ப முன்னேற்றத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். வீட்டின் மகிழ்ச்சியும் அமைதியும் முற்றிலுமாக அழிந்துவிடும், அத்தகைய சூழ்நிலையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாறி மாறி உடல்நிலை சரியில்லாமல் போகும்.

அத்தகைய சூழ்நிலையில், வாஸ்து குறைபாடுகளை நீக்குவதற்கு பல வகையான வாஸ்து குறிப்புகள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் வீட்டில் ஆற்றலை உருவாக்க முடியும். வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அந்த வகையில் வாஸ்து தோஷங்களை நீக்க மயிலிறகுதொடர்பான பரிகாரமும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மயிலிறகுகளை வீட்டில் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். வீட்டில் மயில் இறகுகளை பயன்படுத்துவது நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதுடன், உங்கள் வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் நீக்குகிறது. எனவே மயிலிறகு தொடர்பான வாஸ்து பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த ஒரு பொருள் தவறான திசையில் இருந்தால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும்.. உடனே மாற்ற வேண்டும்

உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அதன் காரணமாக எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால், உங்கள் வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மயிலிறகுகளை வைக்க வேண்டும் வேண்டும், இதைச் செய்வதன் மூலம், உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் திகரிக்கத் தொடங்குகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டின் கதவுக்கு அருகில் மயில் இறகுகளை வைக்கலாம், இதை செய்வதன் மூலம், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது. மேலும் வாஸ்து தோஷத்தின் விளைவு குறையும்.

மயிலிறகை வீட்டில் சுபமுகூர்த்தம் பார்த்த பின்னரே வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது, இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு நேர்மறை சக்தி வந்து சேரும், மேலும் வீட்டில் ஏற்படும் வாஸ்து தோஷங்களும் நீங்கும்.

வீட்டில் வைக்கப்படும் மயிலிறகு எப்போதும் எதிர்மறை விளைவுகளை நீக்க உதவுகிறது நேர்மறை ஆற்றலை தன்னை நோக்கி ஈர்க்கிறது. மயிலிறகு மகாலட்சுமிக்கும் சரஸ்வதி தேவிக்கும் மிகவும் பிடித்தமானது. அத்தகைய சூழ்நிலையில், அதை உங்கள் வீட்டில் மயிலிறகை வைப்பதன் மூலம் செல்வக் குறைபாட்டை நீக்கலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், உங்கள் வீட்டில் உள்ள அனைத்து வகையான வாஸ்து தோஷங்களின் தாக்கங்களையும் நீக்கி, உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரலாம்.

ஒருபோதும் இந்த 4 பொருட்களை மட்டும் காலியாக வைக்காதீங்க.. வீட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படலாம்..

Follow Us:
Download App:
  • android
  • ios