Asianet News TamilAsianet News Tamil

இந்த ஒரு பொருள் தவறான திசையில் இருந்தால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும்.. உடனே மாற்ற வேண்டும்

கடிகாரங்களைப் பற்றி வாஸ்துசாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Vastu tips : If there is a problem at home, you should immediately change the direction of the clock.. Do you know why?
Author
First Published Jul 1, 2023, 3:48 PM IST

 வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பொருட்களை சரியான திசையில் வைப்பது மிகவும் முக்கியம். பொருட்களை சரியான திசையில் வைக்கவில்லை என்றால், வாஸ்து தோஷம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் கடிகாரம் சரியான திசையில் இருப்பது மிகவும் முக்கியம். கடிகாரம் தவறான திசையில் இருந்தால், ஒருவர் நிதி, மன மற்றும் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடிகாரங்களைப் பற்றி வாஸ்துசாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

சரியான திசையிலும் சரியான இடத்திலும் ஒரு கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை சரியான திசையில் வழிநடத்தும். கடிகாரத்தின் திசை மட்டுமல்ல நிறம் மற்றும் வடிவமும் முக்கியம். எந்த திசையில் எப்படி கடிகாரத்தை அமைப்பது என்பதை அறிந்து கொள்வோம். அதன்படி, கிழக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரம் மங்களகரமானது. வடக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரமும் நல்ல பலனைத் தரும்.

கடிகாரத்தை மேற்கு திசையில் வைக்கக் கூடாது. மேலும் கடிகாரம் வட்டமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கடிகாரத்தை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் கடிகாரத்தை வைத்தால் உங்களுக்கு மோசமான நேரத்தைக் கொண்டுவரும் என்று அர்த்தம். 

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை.. எதை கடைபிடிக்க வேண்டும்?

கடிகாரத்தை ஒருபோதும் கதவுக்கு மேல் வைக்கக்கூடாது. கடிகாரத்தை ஒருபோதும் ஆஃப் செய்து வைக்கக் கூடாது. எப்போதும் சரியான நேரத்தில் வைத்திருங்கள். உடைந்த கைக்கடிகாரத்தை வீட்டில் வைக்கக் கூடாது. . உடைந்த கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஒரு வெளிர் நிற கடிகாரத்தை வீட்டில் வைக்க வேண்டும். இருண்ட நிற கடிகாரத்தை வைப்பதால் வீட்டில் எதிர்மறையை கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது.

புராணங்களின்படி, செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக குபேரர் அறியப்படுகிறார். வடகிழக்கு குபேரரால் ஆளப்படுவதால், கழிப்பறைகள், ஷூ ரேக்குகள் மற்றும் கனமான மரச்சாமான்கள் போன்ற எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் பொருட்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தமக வைக்கவும். இது தவிர வீட்டின் வடகிழக்கு திசையில் கண்ணாடி அல்லது குபேர யந்திரம் வைப்பதால் செல்வச் செழிப்பு குறையாது என்று கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி நிலைத்தன்மைக்கு உங்கள் செல்வத்தை வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். உங்கள் நகைகள், பணம் மற்றும் முக்கியமான நிதி ஆவணங்கள் அனைத்தையும் தென்மேற்கு திசையில் வைக்கவும். இந்த திசையில் வைக்கப்படும் பொருட்கள் பன்மடங்கு அதிகரிக்கும். பணப் பெட்டகம் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருந்தால், அதிக செலவுகள் ஏற்படும்.

சனிக்கிழமை காலையில் இந்த விஷயங்களைப் பார்த்தால் நல்ல சகுணம்... விரைவில் அதிர்ஷ்டம் வரும் என்று அர்த்தம்

Follow Us:
Download App:
  • android
  • ios