வெள்ளிக்கிழமை விரதமும் கிடைக்கும் பலன்களும்!
பொதுவாகவே வாரங்களில்செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உரிய நாளாக உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
தெய்வத்தைவணங்குவதற்கும் விரதம் இருப்பதற்கும் சிறந்த நாளாக வெள்ளிக்கிழமை சொல்வார்கள். வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சுக்கிரன் பலம் பெற்று, லட்சுமி தேவியின் முழுமையான அருளை பெறுவார்கள் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை பூஜைகள் விரதம் இருப்பதாக இருந்தால் முதல் நாளான வியாழக்கிழமை வீட்டை சுத்தம்செய்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை வீட்டை துடைப்பது கூடாது என்பதால் முதல் நாளேபூஜை சாமான்கள் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து விட வேண்டும். வீட்டைசுத்தப்படுத்திய பிறகு விரதம் மற்றும் பூஜைகள் செய்வது உத்தமம் ஆகும்.
காலையில் தலைக்கு குளித்து விட்டு விளக்கு மற்றும் சாமி படங்களுக்குமலர்கள் சூடி அலங்கரித்து நெய்வேத்யமாக சர்க்கரை பொங்கல், கேசரி, சுண்டல் என ஏதாவது ஒன்றை செய்து வைக்க வேண்டும். பிறகு விளக்கேற்றி அம்பாளுக்குரிய மந்திரம் உச்சரிக்கலாம்.
வீட்டில் சாம்பிராணி புகை எல்லா இடங்களிலும் படரும் படி வீடு முழுவதும் காட்ட வேண்டும். பிறகு மலர்கள் கொண்டு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். மாலை பூஜை செய்து விரதம் முடிக்கவேண்டும். விரதத்தின் போது பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல்வெள்ளிக்கிழமையில் கடையில்உப்பு வாங்கி கொள்ளலாம். இது சுக்கிரனுக்கு உகந்தது என்பதால் உப்பு வாங்கி வைத்தால் செல்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உப்பு இருக்கும் இடத்தில் மகாலஷ்மி மகிழ்ச்சியாக வாசம் செய்வாள் என்பது ஐதிகம்.
இன்றைய தினத்தில் குபேர விளக்கு ஏற்றி வந்தால் சிறப்பான பலன்களை பெற முடியும் என்று ஆன்மிகம் கூறுகிறது. மேலும் பூஜையின் போது தாமரைப் பூ கொண்டு சாமிக்கு படைத்து பூஜை செய்து வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?
வெள்ளிக்கிழமை மாலையில் சாம்பிராணி புகை வீடு முழுவதும் காட்டி வந்தால்வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த நாளில்6 மணிக்கு மேல் யாருக்கும் பால்,தயிர் கொடுக்காதீர்கள். மேலும் விரதம் இருக்கும்போது கெட்டதை பேசுவது கேட்பது கூடாது. உங்களுக்கு முழு நேரமும் இருக்க முடியாது என்றால் காலை மட்டும் விரதம்இருந்து மதியம் முடித்து கொள்ளலாம். மாலை எப்போதும் போல் பூஜை செய்து வழிபடலாம்.
யாராச்சும் சாபம் விட்டால் பலிச்சிடுமா? யார் சாபம் பலிக்கும்!
இவ்வாறுதொடர்ந்து 11 கிழமைகள் இருந்து வந்தால் லட்சுமி தேவி மற்றும் சுக்கிரன் அருள்முழுமையாக கிடைத்து வாழ்வில் எல்லா வளமும் கிடைத்து சிறப்பான வாழ்வை பெறலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் குன்றாமல் காக்கலாம். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும். இந்த விரதத்தை முழு மனதுடன் ஏற்று நம்பிக்கையுடன் மனதார லட்சுமி தேவியைவேண்டினால் மனம் மகிழ்ந்து கேட்ட வரம் கொடுப்பாள் அம்பிகை. கன்னிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் நல்ல கணவன் கிடைப்பான்.