Asianet News TamilAsianet News Tamil

திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?

ஜோதிட சாஸ்திரம் என்பது இன்று நேற்று வந்ததல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும் யோகிகளாலும் கொண்டு வரப்பட்ட   அற்புதமான பொக்கிஷம் என்று சொல்லலாம். 
 

what is tithi and its benefits
Author
First Published Oct 4, 2022, 6:52 PM IST

ஜோதிடம் பழங்கானது என்று சொன்னாலும் மக்கள் அதை மறக்கவில்லை.  நல்ல நாள் பார்க்க பஞ்சாங்கம் உதவும்.  இதை ஜோதிடம் அறியாதவரும் பார்க்கலாம். நவக்கிரகங்களின் செயல்களுக்கு அன்றாட திதி வார, நட்சத்திர, யோக கரணங்களே ஆதாரம் என்பது குறிப்பிடதக்கது. 

இதில் திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவைக் குறிக்கிறது. அதாவது அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையில் வரும்  நாட்கள் வளர்பிறை நாட்கள் என்றும் இது  சுக்லபட்ச திதிகள் என்றும் அழைக்கப்படுகிறது.  அதே போன்று பௌவுர்ணமி முதல் அமாவாசை வரையிலான இடைப்பட்ட நாட்கள் தேய்பிறை நாட்கள் என்றும் இது  கிருஷ்ணபட்ச திதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய நாளில் வரக்கூடிய திதிகள் என்னென்ன என்பது பார்க்கலாம். 

அமாவாசைக்கு பிந்தைய வளர்பிறை திதிகள் என்பது

ப்ரதமை, துவிதியை, நவமி, திருதியை, தசமி, சதுர்த்தி, ஏகாதசி, பஞ்சமி, துவாதசி, சஷ்டி, திரயோதசி, ஸப்தமி, சதுர்தசி, அஷ்டமி ஆகியவை சுக்லபட்சம் என்கிற வளர்பிறை கால திதிகள்.

பெளர்ணமிக்கு  பிந்தைய தேய்பிறை திதிகள் என்பது

ப்ரதமை, துவிதியை, நவமி, திருதியை, தசமி, சதுர்த்தி, ஏகாதசி, பஞ்சமி, துவாதசி, சஷ்டி, திரயோதசி, ஸப்தமி, சதுர்தசி, அஷ்டமி ஆகியவை பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் தேய்பிறை கால திதிகள்.

நாட்காட்டியில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த திதி காலங்களில் நாம் சிலவற்றைச் செய்ய வேண்டும், சிலவற்றைத் தவிர்க்க வேண்டும். அது குறித்து பார்க்கலாம். 

வளர்பிறை திதி:

வளர்பிறை நாட்களில் (அமாவாசை) பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி தவிர மற்றவை உத்தமம். 

அமாவாசை:

அன்றைய நாளின் கரணங்களைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

தேய்பிறை திதி:

பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை நாட்களில் துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, சதுர்தசி முதலியவை நல்ல நாட்கள். திருதியை முதல் ஸப்தமி வரையுள்ள தேய்பிறை நாட்கள் வளர்பிறை நாட்களுக்கு ஒப்பான நல்ல நாட்கள்.

கணவன் மனைவி சச்சரவுகளை தீர்க்கும் பிரயாக்ராஜ் புண்ணிய தலம்..

கரணம்:

திதியில் பாதியளவு, கரணம் எனப்படும். 
‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது இந்தக் கரணங்களை தான் குறிக்கிறது.  இந்த கரணங்கள் மொத்தம் பதினொன்று. அவற்றின் குணங்கள் வேறுபடும்.

பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை - உத்தமம்.

வணிஜை, பத்திரை - மத்திமம்.

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் - அதமம்.

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் ஆகிய நான்கு கரணங்களும் மிகவும் பொல்லாதவை. இந்த நான்கு கரணங்களில்  முக்கியமான காரியங்களையும் ஏன் எந்த காரியங்களையும்  செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனைய பவம் முதல் கரஜை வரையுள்ள ஐந்து கரணங்களும் நன்மை தரும். இவற்றில் நீங்கள் காரியங்கள் செய்யலாம்.

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்துக்கினம் இவை நான்கும் பெரும்பாலும் அமாவாசையை ஓட்டியே வரும். அமாவாசைக்கு முதல் நாள் அல்லது அமாவாசையன்று அல்லது மறுநாள் என்று மாறி மாறி வரும். அதனால்தான் அமாவாசைக்கு முதல் நாள், அமாவாசை நாள் மற்றும் அதற்கு மறுநாள் எதையும் தவிர்ப்பது நல்லது என்று சொல்வது.

தடைப்பட்ட திருமணம் கைகூட திருமணக்கோல வெங்கடாஜலபதியை தரிசியுங்கள்!

 இன்றைய காலத்தில் அமாவாசை நிறைந்த நாள் என்று எல்லாவற்றையும் செய்கிறார்கள். அன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆசி கிட்டும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். இருந்தாலும், அமாவாசையன்று இந்த நான்கில் ஏதேனும் ஒரு கரணம் இருந்தால் அன்று செய்யக்கூடிய முக்கியமான நிகழ்வுகளைக் கூடுமானவரைக்கும் தவிர்த்து விடுவது உங்கள் காரியங்களில் தடை ஏற்படாமல் காக்கும்.

அமாவாசை சனிக்கிழமை அன்று வந்தால் நீங்கள் எல்லா காரியங்களையும் செய்யலாம்.  அன்று நல்ல காரியங்கள் நிலைத்து வளம் சேர்க்கும். 

எந்த திதியில் என்ன செய்யலாம் தொடர்ந்து பார்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios