Asianet News TamilAsianet News Tamil

தென்னக காசியான ஈரோடு பைரவர் ஆலய கும்பாபிஷேகம்; பல மாநில பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள இராட்டைசுற்றி பாளையத்தில் உலக சாதனை பெற்ற தென்னக காசியான பைரவர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 

erode bairavar temple kumbabishekam festival held well
Author
First Published Mar 13, 2023, 4:54 PM IST

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள இராட்டைசுற்றி பாளையத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயர காலபைரவர் நுழைவு வாயிலாக கொண்ட தென்னக காசி பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கிராம சாந்தி நடைபெற்றது. 

தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி தொடங்கியது. அதனை தொடர்ந்து சொர்ணாகர்ஷண பைரவருக்கு நெய் அபிஷேகத்தை பைரவர் பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாஸ்து சாந்தி பிரவேசம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் கோபூஜை, தனபூஜை, அஸ்த்ர ஹோமம், அக்னி சங்கிரஹனம் தேவதா அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாசனை, பஞ்சகவ்யம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா ஹிதி, தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலாலய கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவாரம் மூர்த்தி அனைத்திற்கும் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் கோபுர சிலைகள் கண் திறத்தல் நிகழ்ச்சியும், மாலையில் பரிவாரங்களுடன் கும்பாபிஷேக கலச தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி அவல்பூந்துறை ஈஸ்வரன் கோயில் இருந்து நேற்று நடைபெற்றது. 

முன்னதாக ஈஸ்வரன் கோவிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆதாரனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தீர்த்த ஊர்வலத்தில் யானை, குதிரைகள் அணிவகுத்து செல்ல அதற்கு முன்பு பொய்கால் குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், வானவேடிக்கை என பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக முதல் காலயாக பூஜை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று நான்காம் கால யாக பூஜையும் திருக்கயிலாய வாத்தியம் ஓதுவார்கள் படை சூழ மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை அவல்பூந்துறை ஸ்வர்ண பைரவர் பீடம் ஸ்ரீ விஜய் சுவாமிஜி ஆசிர்வாதத்துடன் அவல்பூந்துறை ஸ்ரீ செல்வ ரத்தினம் சிவாச்சாரியார் நடத்தி வருகிறார்.

இந்த கும்பாபிஷேகத்திற்கான நட்சத்திர கலச தீர்த்தாபிஷேகம் பைரவ அலங்கார ஆரத்தி அர்ச்சனைக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

கோவையில் புலம்பெயர்  தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

இந்த கும்பாபிஷேகத்தையொட்டி அரச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் 150க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள நிலையில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா, கர்னாடகா, ஆந்திரா, தமிழகத்தின் ஈரோடு, கரூர், திருப்பூர், இருந்து வரும் வாகனங்கள் அவல்பூந்துறை நால்ரோட்டில் இருந்து காரூத்துப்பாளையம், கண்டிக்காட்டுவலசு, லிங்காத்தாகுட்டை, பண்ணை கிணறு வழியாக அரச்சலூர் கைகாட்டி பிரிவிற்கு வந்து சென்றது. இந்த பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து; உடல் சிதறி ஒருவர் பலி

அதே போல் காங்கேயம் வழியாக வரும் வாகனங்கள் அதேபோல் சாலையில் திருப்பி விடப்படுகிறது. காலை முதல் மாலை வரை இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அவல்பூந்துறை பைரவர் பீடம் பைரவர் கோயிலின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அவல்பூந்துறை  ஈஸ்வரன் கோயிலில் இருந்து யானை, குதிரை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios