திண்டுக்கல்லில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து; உடல் சிதறி ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் செல்லதுரை. விவசாயியான செல்லதுரைக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து அவற்றை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
அப்போது கிணறு வெட்டும் பணியில் கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (வயது 30) கிணற்றுக்குள் இறங்கி வெடி மருந்தை வைப்பதற்காக தற்காலிக பந்தலில் வெடி மருந்துகளை வைத்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின. இதல் மணி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது
இதுகுறித்து கீரனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடி வைத்த தோட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். கிணறு வெட்டுவதற்காக வெடி மருந்து பாதுகாத்து வைக்கபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் கடைக்கு சென்ற சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை; போதை ஆசாமிகள் வெறிச்செயல்